Followers

Monday, October 21, 2013

ஆளும் கிரகங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நாம் சோதிடப்பலனை சொல்லும்பொழுது நம்மிடம் கேட்கும் கேள்விக்கு வரும் ஜாதகத்தில் இருக்கும் கிரகநிலைகள் மட்டும் வைத்து சொல்லகூடாது. இன்றைய நாள்க்குள்ள கிரகங்களையும் வைத்து சொல்லவேண்டும்.

ஒருத்தர் குழந்தைப்பற்றி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஐந்தாவது வீட்டு அதிபதியை மட்டும் வைத்துக்கொண்டு பலனை சொல்லிவிடமுடியாது. அவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இன்றைய நாள் திங்கள்கிழமை என்றால் சந்திரனையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து இன்றைய நட்சத்திரம் கார்த்திகை என்றால் சூரியனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்பொழுது பலனை சொல்லும்பொழுது

ஐந்தாவது வீட்டு அதிபதியின் கிரகம் மற்றும் குரு கிரகம்
சந்திரன்
சூரியன்

என்று நான்கு கிரகத்தையும் வைத்துக்கொண்டு பலனை நாம் சொல்லவேண்டும். இது தான் ஆளும்கிரகம் என்று சொல்லுவார்கள். இன்றைய நாளின் அதிபதி மற்றும் நட்சத்திரஅதிபதி ஆகியவை ஆளும் கிரகத்தின் கீழ் வந்துவிடுவார்கள்.

இதில் இருக்கும் கிரகத்தை கொண்டு ஒரு கிரகம் நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை இருக்கும் என்று சொல்லிவிடலாம்.அன்றைய காலங்களில் சோதிடரை பார்க்க போவது கூட நல்ல நேரம் பார்த்து தான் செல்வார்கள். ஏன் என்றால் நல்லகிரகங்களின் நேரத்தில் நமக்கு நல்ல பலனை அவரால் சொல்லமுடியும். எதிர்ப்பான நிலையை தவிர்த்துவிடுவார்கள்.

நீங்களும் ஆளும்கிரகத்தின் துணையோடு ஜாதகபலனை சொல்லுங்கள். சரியாக நடக்கும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: