வணக்கம்!
உங்களுக்கு வயது 35 க்கு மேல் இருந்தால் நீங்கள் அதிகம் கவனிக்கப்படவேண்டியது உங்களின் உடலை தான். உங்களின் உடல் நன்றாக இருக்கின்றதா என்பதை பார்த்துக்கொள்ளவேண்டும். உங்களின் உடலை மருத்துவர்களிடம் சென்று காண்பித்தால் அவர்கள் ஏதாவது ஒன்றைச்சொல்லி உங்களை பயமுறுத்திவிடுவார்கள். மாறாக நீங்களே அதிககவனத்தை உங்களின் உடலின் மேல் வைத்தால் நீங்களே உங்களை சரிசெய்துக்கொள்ளமுடியும்.
வாழ்க்கையில் இரண்டு பகுதியாக பிரித்து உங்களின் வயதை கவனிக்கும்பொழுது சராசரியாக இதனை சொல்லுகிறேன். 35 வயதிற்க்கு மேல் உங்களின் உடல் அதிக பிரச்சினையை உங்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கும் என்பதால் இதனை கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.
நான் பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். உங்களின் உடலில் நல்ல சக்தி இருந்தால் உங்களுக்கு என்னால் எளிதில் வேலை செய்யமுடியும் என்று சொல்லிருக்கிறேன். அதற்கு காரணம் இது தான் உடலில் நல்ல சத்து இருக்கும்பொழுது எளிதாக வேலை நடக்கும்.
சக்தி குறைந்த உடலை வைத்துக்கொண்டு ஆன்மீகத்தை நாடும்பொழுது அதிக சிரமாக அனைத்தும் இருக்கும் என்பதால் அதிக கவனத்தை இதில் காட்டுங்கள் என்று சொல்லுவது உண்டு. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நன்றாக சாப்பிட்டு உங்களின் உடலை நன்றாக பராமரியுங்கள் என்று சொல்லுவது இந்த காரணத்தால் தான்.
உடல் வலு குறையாமல் இருந்தால் நீங்கள் எந்த காலத்திலும் வெற்றி பெற்றுவிடலாம். உடல வலுகுறைந்தால் எந்த விதத்திலும் முன்னேற்றம் என்பது கிடைக்காது. ஏதோ ஒரு விதத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் அதனை வைத்து ஒன்றும் நடக்க போவதில்லை அதனால் உடல் மீது அதிக கவனம் வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment