வணக்கம்!
பொதுபரிகாரம் என்ற ஒன்றை அறிவித்தாலும் இந்த பரிகாரம் அனைத்தும் ஒரு நபர் சம்பந்தப்பட்டது போல தான் நடத்திக்கொண்டு இருக்கிறேன். பொதுபரிகாரம் என்ற ஒன்றை சொல்லுவதற்க்கு காரணம் என்பது பணம் நான் நிர்ணயம் செய்வதில்லை. நீங்களே பணத்தை உங்கள் விருப்பம் போல் செலுத்தலாம். செலுத்த இயலாதவர்களுக்கு இலவசமாக கூட செய்கிறோம்.
பொதுவாக ஏதோ கூத்து அடிப்பது போல் கிடையாது என்பது தான் உண்மை. இதனை நேரில் ஒவ்வொருவரையும் பங்குக்கொள்ள வைக்க பல சிக்கல் இருப்பதால் தான் நான் மட்டும் செய்துக்கொண்டு இருக்கிறேன்.
ஒவ்வொருவரையும் கூப்பிட்டு நம்ம இடத்தில் வைத்து செய்வதற்க்கு ஒரு சில இடைஞ்சல் இருக்கின்றது அதனை போக்கிவிட்டால் ஒவ்வொருவரையும் நம்ம இடத்திற்க்கு வரவழைத்து இதனை செய்துவிடலாம். எதிர்காலத்தில் அப்படி நடக்கும்.
பொதுபரிகாரம் நாம் தனியாக தான் ஜாதகத்தை அனுப்பவேண்டும் என்று பலர் அனுப்பவில்லை என்று நண்பர்களின் வாயிலாக தெரிந்துக்கொண்டேன். நம்பிக்கையோடு இதில் பங்குக்கொள்ளலாம். அனைவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.
பலருக்கு நேற்று மெயில் செய்துவிட்டேன். போனில் தொடர்புக்கொண்டும் பேசியிருக்கிறேன். இதுவரை மெயில் அல்லது போன் வராதவர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment