வணக்கம்!
பூர்வபுண்ணியத்தில் செவ்வாய் சம்பந்தப்பட்டால் அவர்களுக்கு பெரும்பாலும் கடன்கள் வந்துக்கொண்டே இருக்கும். ஏதாவது ஒன்றுக்கு கடன் வாங்கவேண்டிய நிலை உருவாகிக்கொண்டு இருக்கும். ஆறாவது வீடு தானே கடன் வீடு என்று நிலைக்கலாம். ஆறாவது வீடு தான் கடனை கொடுக்ககூடிய வீடு ஆனால் எல்லா வீட்டிற்க்கும் வேலை செய்ய கொடுக்கும் ஆற்றல் பூர்வபுண்ணியத்திற்க்கு உள்ளது.
செவ்வாய் அல்லது ராகு ஐந்தில் சம்பந்தப்பட்டால் அவர்கள் கடன் வாங்கிக்கொண்டு இருப்பார்கள். ஒரு சில இடத்தில் கடனை வாங்கினால் திருப்பிக்கொடுக்கமுடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கிவிடுவார்.
பூர்வபுண்ணியத்தில் செவ்வாய் அல்லது ராகு சம்பந்தப்பட்டால் ஒரு சில இடத்தில் நல்லது செய்கிறது ஆனால் ஒரு சில இடத்தில் பிரச்சினை அதிகம் கொடுத்துவிடுகிறது. இந்த வீட்டில் இந்த கிரகங்கள் சம்பந்தப்பட்டால் ஆண் வாரிசு அதிகமாக இருக்கும்.
ஒரு சில இடத்தில் அதிகமான சண்டை சச்சரவுகளை கொடுப்பது இந்த கிரகங்களாக இருக்கும். இந்த கிரகங்களால் குடும்பத்தில் எந்த நேரமும் சண்டை சச்சரவுகளை அதிகமாக கொடுத்துக்கொண்டு இருக்கும். ஒரு சில இடத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் நிலவதற்க்கு இது தான் காரணமாக இருக்கின்றது.
ஒரு சில இடத்தில் பூர்வபுண்ணிய நிலத்தை கையாளப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். யாராவது வந்து இது என்னுடைய நிலம் என்று சொல்லுவார்கள். உங்களின் இடத்தை அடுத்தவர்கள் என்னுடையது என்று சண்டை சச்சரவு செய்வார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment