வணக்கம்!
பிரம்மமுகூர்த்த நேரத்தில் எழுந்து செய்யக்கூடிய எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகளும் தோல்வி அடைவதில்லை. அனைத்தும் வெற்றியை தான் தரும். நூற்றுக்கு நூறு சதவீதம் காரியத்தை சாதித்துக்கொடுத்துவிடும்.
இந்த நேரத்தில் சாதாரணமான மனிதர்கள் விழிப்படைய மாட்டார்கள். தூங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதற்க்காக தான் இந்த நேரத்தை தேர்ந்து எடுத்து வைத்தார்களாக என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் பெரும்பான்மையான மக்கள் நல்ல தூங்கிக்கொண்டு இருப்பார்கள்.
குறைந்த மக்கள் வேண்டுதல் வைக்கும்பொழுது அது எளிதில் இந்த பிரபஞ்சத்திற்க்கு சென்றுவிடுகிறது. அந்த நேரத்தில் டிராபிக் இருப்பதில்லை. உடனே அங்கு சென்று நமக்கு வேண்டியது கிடைத்துவிடுகிறது.
சரியாக மூணரை மணிக்கு எழுந்து இதனை செய்யவேண்டும். இந்த நேரத்தில் எழுந்தால் கண்டிப்பாக நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க முடியாது. பகலில் கொஞ்சம் தூங்கவேண்டும் அதன் பிறகு வேலை செய்யலாம். கொஞ்ச நாள்கள் பழக்கிக்கொண்டால் நாள் முழுவதும் விழித்துக்கொண்டு இருக்கலாம்.
எது கெட்டநாள்கள் என்று சொல்லுகிறோமோ அந்த நாளிலில் எளிதில் நாம் வைக்கும் வேண்டுதல் நடந்துவிடும். கெட்டநாள்கள் என்று பெரும்பான்மையான மக்கள் கோவிலுக்கும் செல்லுவதில்லை. சாமியும் கும்பிடுவதில்லை. இதனையும் நாம் பயன்படுத்திக்கொண்டால் நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment