வணக்கம்!
பூர்வபுண்ணியத்திற்க்கு என்று பரிகாரம் சொல்லிருந்தேன். பல நண்பர்கள் அவர்களின் ஜாதகத்தை அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். நான் நிறைய ஜாதகங்களை எதிர்பார்க்கிறேன். அனைவரும் இந்த பரிகாரத்தில் பங்குக்கொள்ளவேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
பூர்வபுண்ணியத்தில் மிக மிக முக்கியமான ஒன்று அவர் அவர்களின் குலதெய்வம். குலதெய்வத்தின் சக்தி மறைந்திருந்தாலும் இந்த பரிகாரத்தால் அந்த குலதெய்வத்தின் சக்தியை நீங்கள் பெறமுடியும். உங்களுக்கு குலதெய்வத்தின் அருள் கிடைப்பதற்க்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
உங்களின் பங்காளிகளில் ஒருவர் மட்டும் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பார். மற்றவர்கள் அனைவரும் ஏதோ வாழ்க்கின்றோம் என்று வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் உங்களின் குலதெய்வம் அவர்களுக்கு மட்டும் நல்லது செய்துக்கொண்டு இருக்கும்.
ஒரு சில இடத்தில் குலதெய்வத்தை அவர்களுக்கு மட்டும் நல்லது செய்வது போல செய்து வைத்திருப்பார்கள். ஒரு சில இடத்தில் அவர்களின் கிரகங்கள் நல்ல வலுபெறும்பொழுது குலதெய்வம் அவர்களின் பக்கம் சென்றுவிடுவது உண்டு.
குலதெய்வம் உங்களின் பக்கம் பார்ப்பதற்க்கு ஒரு வசதியாக தான் இந்த பரிகாரத்தை முடிவு செய்து அறிவித்தேன். கிரகங்கள் மட்டும் செய்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது குலதெய்வத்தின் அருளும் வேண்டும் என்று இந்த பரிகாரம் முடிவு செய்து அறிவித்தேன்.
பரிகாரம் ஒரு சவாலான ஒரு விசயம் தான். பூர்வபுண்ணியத்தை சரி செய்வது கூட அவர்களுக்கு ஒரு புண்ணியம் இருக்கவேண்டும் அல்லவா. புண்ணியம் இருக்கும் நபர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டனர். ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே ஜாதகத்தை அனுப்பிவையுங்கள்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment