Followers

Monday, July 3, 2017

உழைப்பு வீணாக போகின்றதா?


வணக்கம்!
         பல வருடங்களாக ஜாதகம் பார்த்துக்கொண்டு வருகிறேன். இதில் பல மோசமான ஜாதகங்களுக்கு காரணமாக இருப்பது அவர்களின் பூர்வபுண்ணியம். பூர்வபுண்ணியம் கெட்டாலே அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுவிடுவார்கள்.

என்னுடைய பூர்வபுண்ணியம் கூட கெட்டு தான் இருந்தது. அதனை சரிசெய்ய பல வழிகளை பின்பற்றி இருக்கிறேன். சம்பந்தமே இல்லாமல் அடுத்தவர்களுக்காக நாம் உழைத்துக்கொண்டு இருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் பூர்வபுண்ணியம் கெடுவதால் மட்டுமே.

பல பேர்களுக்கு எதற்காக நான் உழைக்கிறேன் என்று தெரியாமல் உழைத்து இருக்கிறேன். அவர்களுக்கு கஷ்டப்பட்டு ஒன்றும் அடைந்தது கிடையாது. மாறாக நமக்கு தான் பிரச்சினையை கொடுக்கப்பார்கள்.

இன்றைய நிலையில் கூட பூர்வபுண்ணியம் கெட்ட ஆள்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்று செய்வது உண்டு. அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.  நம்முடைய கர்மா பிறர்க்கு செய்துக்கொடுப்பது என்பதால் இதனை செய்கிறேன்.

உங்களுடைய முழு உழைப்பும் வீணாக சென்றால் அதற்கு காரணம் உங்களின் பூர்வபுண்ணியம் என்பதை அறிந்துக்கொண்டு அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: