Followers

Friday, July 28, 2017

கடன்


ணக்கம்!
          ஒரு மனிதன் கடன் இல்லாமல் வாழ்வது என்பது இந்த உலகத்தில் சாத்தியமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏதாவது பத்து சதவீதம் பேர் கடன் இல்லாமல் வாழ்ந்தாலே பெரிய விசயம் தான். 

ஒருவரின் ஜாதகத்தில் ஆறாவது வீடு ஒருவருக்கு கடனை கொடுக்கும் வீடாக இருக்கிறது. ஒருவருக்கு ஆறாவது வீடு தசா நடக்காவிட்டாலும் அல்லது அது சம்பந்தபடாவிட்டாலும் கடன் என்பது உங்களுக்கு எப்படியும் வந்துவிடுகிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம் என்றால் ஏதாவது ஒரு ரூபத்தில் ஆறாவது தன்னுடைய வேலையை காண்பித்துவிடுகிறது என்று அர்த்தம்.

கடன் அதிகம் ஏற்படுவதற்க்கு குரு கிரகம் சரியில்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது. ஐந்துக்கு காரகம் வகிக்கும் குரு தனனுடைய பலன் குன்றினால் ஆறாவது வீடு தலை தூக்கிவிடுகிறது. கடனை கொடுத்துவிடுகிறது.

குரு கிரகம் அல்லது உங்களின் குலதெய்வம் சரியில்லை என்றாலும் உங்களுக்கு கடன் வந்துவிடும். பூர்வபுண்ணியத்திற்க்குரிய குலதெய்வம் ஏதோ ஒரு காரணத்தால் தன்னுடைய வேலையை செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு கடன் வந்துவிடும்.

எனக்கு கடனே இல்லை என்று ஒருவரும் சொல்லிவிடமுடியாது. நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் கடனில் சிக்கி தான் இருப்பீர்கள். நல்ல பணம் வைத்திருப்பவர்களுக்கு கூட அவர்கள் லோன் என்று வங்கியில் பணம் வாங்குவார்கள். அதுவும் கடன் தான். ஏதோ ஒரு விதத்தில் கடன் உங்களை சூழ்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

Superb observation I'm running pathakathipathi guru dasa , guru is in fifth house in my horoscope I'm mithuna lagna I'm having more credit or kadan excellent keep it up and help others by your observations
Thanks
Ravi