வணக்கம்!
ஒரு முறை சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு வரும்பொழுது சென்னையில் அரசுபேருந்தில் வந்தேன். பகல்வேளையில் வந்தேன். மதிய உணவுக்கு விக்ரவாண்டி என்ற இடத்தில் பேருந்தை நிறுத்தினார்கள்.
மதிய வேளையில் வந்த காரணத்தால் மதிய உணவை சாப்பிடவேண்டும் என்று அந்த உணவுவிடுதியில் சாப்பிட்டேன். அதன்பிறகு பேருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்துவிட்டேன். இது நடந்தது பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று.
அன்று இரவு வாய் எல்லாம் கொப்புளம் வந்துவிட்டது. உணவு உடலுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. உணவு எனக்கு விஷமாக மாறிவிட்டது என்று தெரிந்தது. மறுநாள் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. அப்பொழுது எனக்கு நடந்தது ராகு தசா.
பொதுவாகவே அரசுபேருந்து நிற்க்கும் இடத்தில் எந்த பொருளை வாங்கி சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது என்றாலும் அந்த நேரத்தில் எனக்கு ராகு தசா நடந்த காரணத்தால் அது மேலும் வலு சேர்த்துவிட்டது. ஒரு மாதகாலம் அதில் நான் கஷ்டப்பட்டேன்.
ராகு தசா நடக்கும்பொழுது அல்லது ராகு பலமாக உங்களின் ஜாதகத்தில் அமைந்திருந்தால் சாப்பிடும் உணவில் உங்களுக்கு விஷம் அதிகமாக கலந்துவிடும். அதாவது சாப்பாட்டால் விஷம் வரும். நமது உடலில் நச்சு தன்மையை அதிகம் ராகுவால் தான் வரும்.
எதார்த்தமாக நேற்று கொல்லை கீரை வீட்டில் வாங்கிவிட்டார்கள். அதனை சமைத்த பிறகு பார்த்தால் அதில் இருந்து பால்டாயில் மருந்து வாசம் வருகின்றது. நன்றாக சுத்தம் செய்து சமைத்து இருக்கின்றார்கள் அப்படியும் அது வந்துவிட்டது. அனைத்து கீரையும் கொட்டிவிட்டோம்.
தற்பொழுது எனக்கு ராகு தசா நடக்கவில்லை எப்பொழுதாவது எதாவது ஒரு விதத்தில் நம்மை இந்த ராகு தாக்க நினைக்கின்றது. கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் வரும் என்பதற்க்காக தான் இதனை சொல்லுகிறேன் எச்சரிக்கையோடு இருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment