வணக்கம்!
சம்பாதிப்பது என்பது ஒரு கலை. இந்த கலையும் கற்றுக்கொள்ள தான் வேண்டும். என்ன இதனை அவர்களே கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்த கலை இருப்பதால் அவர்களே கற்றுக்கொள்ளவேண்டும்.
ஒருவருக்கு ஒரு இடத்திற்க்கு சென்றால் அவர்க்கு பணம் வரும் என்றால் அவர் அந்த இடத்திற்க்கு அடிக்கடி சென்றுவரவேண்டும். இது ஒரு டெக்னிக் என்று சொல்லலாம். இதனை எந்த வேலை இருந்தாலும் விட்டுவிட்டு அந்த இடத்திற்க்கு அடிக்கடி சென்றுவரும்பொழுது உங்களுக்கு பணம் வரும்.
ஒரு சிலருக்கு கோவிலுக்கு சென்று வந்தால் பணம் வரும். ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வரும்பொழுது மட்டுமே பணம் வரும். ஒரு சிலருக்கு கடற்கரைக்கு சென்றுவந்தால் பணம் வரும்.
ஒரு சிலருக்கு மதுக்கடைக்கு சென்று வந்தால் பணம் வரும். அவர் அவர்களுக்கு எந்த இடம் என்பது அவர்கள் மட்டுமே தன்னை சோதித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு ஒருவரை சந்திக்கும்பொழுது பணம் வரும்.
இதனை எல்லாம் நீங்கள் தெரிந்துக்கொண்டு செயல்பட்டால் எப்படிப்பட்ட கஷ்ட சூழ்நிலையிலும் பணம் உங்களை நாடி வந்துக்கொண்டே இருக்கும். அந்த இடத்திற்க்கு குறைந்தது மாதம் ஒரு முறையாவது சென்று வரவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment