Followers

Friday, July 28, 2017

நானும் கடனும்


ணக்கம்!
          நம்மைப்பற்றியும் சொல்லிவிடவேண்டும் என்று நினைக்கிறேன். கடன் எனக்கும் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது. கடன் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லலாம். வாங்கின்ற கடனை அடைத்துக்கொண்டு இருக்கிறேன். அவ்வப்பொழுது தேவைப்படுகின்ற பணத்தை வாங்கி அதன் பிறகு கொஞ்ச கொஞ்சமாக அடைத்துவிடுவதும் உண்டு.

ஆன்மீகத்தை தொழிலாக செய்கின்றனர் எப்படி கடன் வரும். ஆன்மீகம் என்றாலே பணம் புரளும் ஒரு தொழில் என்று முதல் கண்ணோட்டம் அனைவருக்கும் இருக்கும். பணம் புரளும் இடம் என்பது எனக்கும் நன்றாக தெரியும் அதனை நான் அதிகம் விரும்பாமல் கொஞ்சம் நிதானமாக சென்றுக்கொண்டு இருக்கிறேன். வருகின்ற பணம் அதிகமாக ஆன்மீக காரியங்களுக்கு அதிகமாக செலவு செய்கிறேன்.

அடிப்படையை சரிசெய்வதற்க்கு அதிக பணம் தேவைப்பட்டது அந்த காரியத்திற்க்காக பணத்தை போட்டபொழுது கடன் ஏற்பட்டது. அதனை எல்லாம் சரி செய்துக்கொண்டு வருகிறேன். உங்களுக்கும் இப்படி தான் கடன் வரும். உங்களின் தந்தையார் எதுவும் செய்யாமல் இருந்தால் அதனை சரிசெய்யவதற்க்கு உங்களுக்கு கண்டிப்பாக அதிக பணம் தேவைப்படும் அதற்கு உங்களுக்கு கடன் ஏற்பட்டு இருக்கும்.

நமக்கு என்று பூஜைகள் எல்லாம் செய்வதாலும் கொஞ்சம் இந்த கடன் எல்லாம் நிவர்த்தி செய்யமுடிகிறது. அப்படி இல்லை கண்டிப்பாக நானும் மாட்டிக்கொண்டு தான் இருப்பேன். எதுவும் செய்யமுடியாது. பரிகாரம் நமக்கும் செய்துக்கொள்ளவேண்டும்.

கடன் ஏற்படுவதற்க்கு வாழுகின்ற நாடும் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும். அதாவது நாம் வாழ்வதற்க்கு வீட்டை அரசாங்கம் கொடுத்துவிட்டு அதற்க்கு வசதியாக நாம் பணத்தை கட்ட கொடுத்தால் அதிகப்பட்ச கடனை தவிர்க்கமுடியும். நம்ம நாட்டில் இதனை எதிர்பார்க்கலாமா? வேலை இல்லை என்றாலும் மாத மாதம் பணம் கொடுக்கும் நாடுகள் எல்லாம் இந்த பூமியில் இருக்கின்றனவ அல்லவா அதனால் தான் சொல்லுகிறேன் நாடும் இதற்கு காரணம் என்று சொல்லமுடியும்.

என்னுடைய ஜாதகத்தில் ஆறாவது வீடு சம்பந்தப்படுதா என்று நினைக்கலாம். கண்டிப்பாக அனைவருக்கும் பனிரெண்டு வீடும் சம்பந்தப்படும். எந்த வீடு அதிக வேலையை கொடுக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். என்னுடைய ஜாதகத்தில் கொஞ்சம் ஆறாவது வீட்டிற்க்கு சம்பந்தம் இருப்பதால் இந்த கடன் வருகின்றது. அதனை சரிசெய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

என்னுடைய ஜாதகத்தில் குரு நன்றாக இருக்கின்றது. குலதெய்வ அருளும் இருக்கின்றது அப்படியே ஆறாவது வீட்டை உடனே ஒதுக்கி தள்ளிவிடமுடியாது. ஒன்றை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். பூஜைகள் பரிகாரம் இதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்லுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: