வணக்கம்!
பூர்வபுண்ணியத்தில் ஒருவர் கேட்டுருந்தார். எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை. பூர்வபுண்ணியத்திற்க்கு பரிகாரம் செய்தால் குலதெய்வம் தெரியவதற்க்கு வாய்ப்பு இருக்குமா என்று கேட்டார்.
குலதெய்வம் தெரியாமல் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பது தெரிகிறது. முன்னோர்கள் செய்த தவறுகளால் தான் இப்படி குலதெய்வம் தெரியாமல் சென்றதற்க்கு காரணமாக இருக்கமுடியும். உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் எப்படிப்பட்ட உயர்பதவியை வகித்தாலும் குலதெய்வத்திற்க்கு செய்யவேண்டியதை மறக்கவே கூடாது.
குலதெய்வம் நம்முடைய வாழ்வில் பின்னி பிணைந்த ஒன்று என்று பல பதிவுகளில் சொல்லிக்கொண்டு வருகிறேன். குலதெய்வத்திற்க்கு நாம் செய்யவேண்டிய பச்சைப்பரப்புதலை செய்து வந்தாலே போதும் லட்சுமி பூஜை செய்யவேண்டியதில்லை. அந்தளவுக்கு பயனை தரும்.
நம்மால் முடிந்தளவுக்கு இந்த பூர்வபுண்ணிய பரிகாரத்தை செய்வோம். அம்மன் அருளால் குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வத்தைப்பற்றி தெரியவருட்டும். இந்த பரிகாரம் மிகவும் முக்கியமான பரிகாரம் என்பதால் ஜாதகத்தை அனுப்பி இதில் கலந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment