வணக்கம்!
பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்புவர்கள் பெரும்பாலும் செய்வது அவர்களின் ஜாதகத்தை மட்டும் அனுப்பி வைத்துவிடுகின்றனர். அவர்களைப்பற்றி எந்த ஒரு தகவலும் தருவதில்லை.
உங்களின் ஜாதகத்தை அனுப்பினால் உங்களைப்பற்றி உள்ள விபரத்தை அனுப்பவேண்டும். இதுவரை என்ன மாதிரியான முயற்சிகளை எடுத்தீர்கள் அது எதனால் தோல்வியை அடைந்தது. தற்பொழுது நீங்கள் இருக்கும் நிலைமை என்ன என்று தெரிவிக்கவேண்டும்.
பலருக்கு அவர்களைப்பற்றி உள்ள விபரம் அவர்களே மறந்துவிடுகின்றனர். தன்மீது அதிக அக்கறை இருந்தால் இது எல்லாம் அந்தளவுக்கு மறக்காது. மறதி நல்லது தான் ஆனால் தான் எடுத்த முயற்சியில் மறதி இருந்தால் எடுக்கபோகின்ற முயற்சியில் வெற்றி இருக்காது.
ஒரு சிலர் மட்டும் எனக்கு போன் செய்து அவர்களைப்பற்றி உள்ள விபரத்தை அனைத்தையும் சொல்லிருக்கின்றனர். அனைவரும் போன் செய்யவேண்டாம். உங்களைப்பற்றி நீங்களே ஒரு பேப்பரில் எழுதும்பொழுது உங்களை வளர்த்துக்கொள்ள அதிகம் அது உதவும்.
பலருக்கு நான் சொல்லும் ஆலோசனை என்ன என்ன செய்தீர்கள் என்பதை ஒரு பேப்பரில் எழுதி பாருங்கள். அதனை எடுத்து மறுபடியும் பார்க்கும்பொழுது உங்களை நீங்களே சரிசெய்துக்கொள்ளமுடியும்.
சும்மா மெயில் அனுப்பினால் போதும் என்பதை விட உங்களைப்பற்றி தெரிவிக்கும் கருத்து உங்களை பலமடங்கு உயர்த்த உதவும். நாளை பூர்வபுண்ணிய பரிகாரத்திற்க்கு கடைசிநாள் என்பதால் உடனே ஜாதகத்தை அனுப்பிவையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment