வணக்கம்!
பரிகாரம் பெரும்பாலும் முடிவடையும் நிலையில் இருக்கின்றது. நாளோடு பரிகாரம் முடிவடைந்துவிடும். நீண்ட நாள்கள் செய்கின்ற பரிகாரமாக இது அமைந்துவிட்டது காரணம் ஒவ்வொரு ஜாதகமும் அப்படிப்பட்டது. தனி தனியாக செய்யவேண்டியதாக போயிற்று.
பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகங்களில் ஒரு ஒற்றுமை இருந்தது. இதனைப்பற்றி ஏற்கனவே நான் சொல்லிருந்தாலும் எனக்கு அது கொஞ்சம் வேலையை குறைத்துவிட்டது. அதாவது ஒரு குடும்பத்தினர் ஜாதகம் அனுப்பினால் குறைந்து ஐந்து பேர் ஒரு குடும்பத்தில் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். இந்த ஐந்து பேரில் நான்கு பேரு ஏறத்தாழ ஒரே மாதிரியாக ஜாதகம் அமையும்.
உதாரணமாக உங்களுக்கு பூர்வபுண்ணியத்தில் சனி சம்பந்தப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஐந்தாவது வீட்டில் சனி சம்பந்தப்படுவார்.
மேலே நான் சொன்னது எதனை காட்டுகிறது என்றால் முன்ஜென்மத்திலும் உங்களோடு தற்பொழுது இருப்பவர்கள் தான் முன்ஜென்மத்திலும் உங்களோடு இருந்தவர்கள். இவர்கள் உறவு கொஞ்ச வித்தியாசப்படலாம் ஆனால் கண்டிப்பாக உங்களோடு இருந்தவர்கள்.
நல்லது கெட்டது எது நடந்தாலும் அது குடும்பத்தில் உள்ளவர்களையும் சாரும் என்பதால் உங்களோடு இருப்பவர்கள் நல்லது கெட்டதற்க்கு காரணமாக தற்பொழுதும் இருக்கின்றனர். தோஷமாக இருந்தால் அனைவருக்கும் அதே தோஷம் இருக்கின்றது.
முன்ஜென்மத்தைப்பற்றி ஜாதக கதம்பத்தில் பழைய பதிவுகளில் நீங்கள் தேடிப்பார்த்தால் உங்களுக்கு பல தகவல்கள் கிடைக்கும். வாழ்க்கையில் சுவாராசியமாக இருப்பதற்க்கு இது எல்லாம் பயன்படும் என்பதால் அதனைப்பற்றி சொல்லுகிறேன். தற்பொழுது அனைவரும் சேர்ந்து உங்களின் தோஷத்தை நீக்கிக்கொண்டு நல்ல முறையில் வாழலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment