வணக்கம்!
பரிகாரமும் உணவு முறையும் சரியாக இருக்கவேண்டும். முதன் முதலில் உங்களின் உணவு தான் சரி செய்யப்படவேண்டும். உணவு எல்லோரும் சாப்பிடுகின்றனர் இதில் எதனை சரிசெய்யவேண்டும் என்று கேட்கலாம்.
சாப்பிடும் உணவில் நல்ல சத்துள்ள உணவை நீங்கள் எடுத்துவிட்டால் போதும் அதுவே பல மடங்கு உங்களின் தோஷத்தை நிவர்த்தி செய்யும். அதன் பிறகு நமது பூஜைகளை செய்யும்பொழுது உங்களை முழுமையாக சரிசெய்துவிடும்.
நல்ல சத்துள்ள உணவு எது என்பது உங்களுக்கே தெரியும். அதனை அறிந்துக்கொண்டு சாப்பிடுங்கள். அப்படி இல்லை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
நான் பல பதிவுகளில் இதனை வலியுறுத்திக்கிறேன். இதனை மறுபடியும் மறுபடியும் சொல்லுவதற்க்கு இதில் பல காரணமும் இருக்கின்றது. நல்ல சத்துள்ள உணவு கிரகங்களின் தோஷத்தில் இருந்து காப்பாற்றும்.
உணவை நாமே தயாரித்து உண்பது ஒரு தனிக்கலை. உணவை நீங்களே தயாரித்து உண்ணும்பொழுது இன்னமும் தனிக்கவனம் செலுத்தலாம். வீட்டில் உள்ளவர்கள் சமைப்பதை விட உங்களின் தனிப்பட்ட கவனம் இதில் அதிகமாக இருக்கும்பொழுது உடலுக்கு தேவையான சத்து நிறைந்து அதில் வந்துவிடும். தினமும் உங்களால் செய்யமுடியவில்லை என்றாலும் வீட்டில் சும்மா இருக்கும்பொழுது இந்த கலையில் ஈடுபடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment