வணக்கம்!
பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்பியவர்களில் பலர் சொல்லிருக்கும் கருத்தை பார்த்தால் அவர்கள் சொல்லுவது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்களாக இல்லை. அனைத்தும் டெக்னிக்கலாக பிரச்சினை இருக்கும் கருத்துகளாகவே இருக்கின்றது.
மனிதர்கள் செய்யும் தவறை தூக்கி கடவுள் மேல் போடும் நிலையில் தான் இருக்கின்றனர். கொஞ்சம் சிந்தனை செய்து செயல்பட்டால் போதும் இந்த பிரச்சினை எல்லாம் அவர்களே தீர்த்துக்கொள்ளமுடியும். அதனை ஆன்மீகத்திற்க்குள் போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை.
இனிமேலாவது இப்படிப்பட்ட தவறுகள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக பதிவில் சொல்லுகிறேன். என்னிடம் தொழில் சம்பந்தமாக வரும் நபர்கள் கூட இப்படி தான் இருப்பார்கள். அவர்களின் தொழிலில் அவர்கள் செய்யும் தவறுகளை கடவுள் எனக்கு இப்படிப்பட்டதை கொடுத்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
உண்மையில் அதனை நன்கு ஆராய்ந்தால் அது இவர்கள் செய்த தவறாக தான் இருக்கும். அதனை போக்கிக்கொள்ள வழி செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். செய்வது அனைத்தும் டெக்னிக்கல் தவறாகவே இருக்கும்.
99 சதவீதம் உழைப்பு 1 சதவீதம் ஆன்மீகம் இது தான் உண்மை. உழைப்பில் தவறை செய்துவிடகூடாது. அனைத்தையும் நன்கு யோசித்து உழைப்பில் கவனம் செலுத்திவிட்டால் போதும். 1 சதவீத வெற்றியை அம்மன் கொடுத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment