வணக்கம்!
குருபூர்ணிமாவைப்பற்றி நேற்று ஒரு பதிவை தந்தேன். இந்த பதிவை படித்துவிட்டு பலர் தொடர்புக்கொண்டார்கள். எனக்கு வாழ்த்து எல்லாம் தெரிவிப்பதை விட உங்களுக்கு ஒவ்வொரு கலையும் கற்றுக்கொடுத்த ஆசானுக்கு நன்றியை சொல்லவேண்டும்.
பலர் குரு என்றாலே வயதில் பெரியோர்களை தான் குருவாக நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இது தவறான ஒன்று. பழமையான காலத்தில் கூட குரு வயது குறைவாக இருப்பார். சிஷ்யனுக்கு அதிக வயது இருக்கும். வயது எல்லாம் கிடையாது.
எனக்கு சமையல் கலையை கற்றுக்கொடுத்தவர் என்னை விட வயது குறைவான நபர் அவருக்கு நான் அன்று வாழ்த்தினேன். எனக்கு ஒவ்வொரு விசயத்தையும் கற்றுக்கொடுத்த அனைவரையும் வாழ்த்தினேன். பலர் என்னை விட வயது குறைவானாவர்கள். சமையல் என்ன பெரிய விசயமா என்று கேட்கலாம். அவர் இல்லாமையிலே கற்றுக்கொள்ளமுடியும் என்று கேட்கலாம் ஆனால் அவர் எனக்கு முதன் முதலில் சொல்லிக்கொடுத்தார் என்பதற்க்காக வாழ்த்தினேன்.
எனக்கு அடுத்தவர்களிடம் விசுவாசம் எல்லாம் இல்லாமல் இருந்தேன். பல காலக்கட்டங்களுக்கு பிறகு தான் இது எல்லாம் தெரியவந்தது. என்னால் முடிந்தவரை விசுவாசத்தோடு இருக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.
கொஞ்சகாலம் எல்லோரிடமும் விசுவாசத்தை காட்டி பாருங்கள். இந்த உலகம் உங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும். தடையே இல்லாமல் செயல்படுவதற்க்கு இந்த விசுவாசம் அதிகமாக வேலை செய்யும்.
பெரியளவில் நீங்கள் வளரவேண்டும் என்றால் இப்படிப்பட்ட பழக்கவழக்கம் தேவை. எந்த விசயத்திலும் விழிப்புணர்வோடு செயல்பட்டு வரும்பொழுது எதுவும் நமக்கு மறக்காமல் வேலை செய்யமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment