வணக்கம்!
ஆன்மீகத்திற்க்கும் பணத்திற்க்கும் என்ன சம்பந்தம் அதிகமாக நீங்கள் பணம் சம்பாதிப்பதை பற்றி அதிகம் எழுதுகின்றீர்கள் காரணம் என்ன என்று நண்பர் ஒருவர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார்.
ஒருவர் தன்னிறைவை பெறும்பொழுது மட்டுமே அவர் ஆன்மீகத்தை நோக்கி செல்லமுடியும். ஒருவர் ஞானம் அடையவேண்டும் என்றாலும் அவர் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து அதில் சலிப்பு ஏற்பட்டு அதன் பிறகு ஞானத்தை அடைய செல்லமுடியும்.
கேது ஒருவருக்கு ஞானத்தை கொடுப்பார் என்று சொல்லுவார்கள் உண்மையில் கேதுவால் கொடுக்கமுடியாது என்பது மட்டுமே உண்மை. வறுமையில் இருப்பவனுக்கு பணத்தை கண்டால் அதனை வைத்து வாழ்வதற்க்கு ஆசைபட்டுவிடுவான். அவன் ஆன்மீகத்தை நோக்கி செல்வதிற்க்கு வாய்ப்பு குறைவு.
முதலில் நன்றாக பணத்தை வைத்து வாழ்ந்துவிட்டு அதன் பிறகு ஆன்மீகத்தை நோக்கி செல்லும்பொழுது ஒருவர் எளிதில் அதனை அடைந்துவிடலாம். நான் சொல்லுவது எல்லாம் ஒருவன் தன்னிறைவு பெறுவதற்க்கு வழியை சொல்லுகிறேன் அதன் பிறகு அவனுக்கு அதில் திருப்தி ஏற்பட்டு ஆன்மீகத்தை எளிதில் அடைந்துவிடலாம்.
கேதுவை விட சுக்கிரன் ஞானத்தை வழங்கமுடியும் என்பது தான் அப்பட்டமான ஒரு உண்மை. அரசகுடும்பத்தில் இருந்தவர்கள் தான் அதிகம் ஞானத்தை நோக்கி சென்றார்கள் என்பதும் உண்மை. அவர்கள் நன்றாக வாழ்ந்துவிட்டு அதன் பிறகு இந்த நிலைக்கு எளிதில் வந்துவிடலாம்.
ஒரு மனிதனுக்கு நிறைய பணத்தை கொடுக்கும் வழியை செய்துக்கொண்டு இருக்கிறேன். அதன் பிறகு அவனே இதனை நோக்கி சென்றுவிடுவான். பலர் இதில் முன்னேற்றம் கண்டுவிட்டார்கள். மீதி இருப்பவர்களும் விரைவில் அடைந்துவிடுவார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment