வணக்கம்!
உணவைப்பற்றி கேளுங்கள் என்று சொன்னவுடன் உடனே நண்பர்கள் அதனைப்பற்றி கேட்டார்கள். என்ன சார் டயட் சொல்லுவீர்களாக என்றார்கள். ஒருவர் நீங்கள் எதாவது புதியதாக டயட் கண்டுபிடித்து இருக்கின்றீர்களா என்று கேட்டார்கள்.
நம்ம வேலை அது கிடையாது. என்ன மாதிரியான சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஒன்பது கிரகமும் நன்றாக வேலை செய்ய என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லுவது மட்டும் தான் நம்ம வேலை.
நீங்கள் சாப்பிடும் உணவில் ஒரு சில உணவுகளை புதியதாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அதனை பொதுவில கூட சொல்லிவிடலாம் ஒவ்வொருவருக்கும் அது மாறிவரும் என்பதால் அதனை பொதுவில் வைப்பதில்லை.
டயட் என்பது ஒரு காலத்திற்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். எல்லா காலமும் டயட் எடுத்துக்கொண்டே இருந்தால் அது பிரச்சினையை கொடுத்துவிடும். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு தகுந்தமாதிரியான உணவை தான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.
ஒருத்தருக்கு மீன் சாப்பிட்டால் தான் நல்ல சத்தாக இருக்கின்றது என்றால் அவன் மீன் சாப்பிட்டால் தான் அவனுக்கு சத்து கிடைக்கும். ஒருத்தருக்கு பருப்பு சாப்பிட்டால் அவர்க்கு சத்து கிடைக்கிறது என்றால் அவர் பருப்பை தான் சாப்பிடவேண்டும். அந்த மனிதனுக்கு அந்த உணவு சத்து கொடுக்கிறது என்று அர்த்தம்.
ஒவ்வொரு தசாவுக்கும் தகுந்தமாதிரி மனிதர்களின் உணவு பழக்கவழக்கம் இருக்கும் என்பது இத்தனை வருடம் இந்த தொழிலில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவம். கூடுதலாக அனைத்து கிரகமும் நன்றாக இருந்தால் நல்லது நடக்கும் அதற்கு அனைத்து கிரகத்திற்க்கும் உள்ள உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது.
நம்முடைய பெரிய டயட் அறிவுரை எது என்றால் முடிந்தளவு உங்களின் உணவு வீட்டிலேயே இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் நீங்கள் அதனை தயார் செய்துக்கொள்ளுங்கள். அது போதுமான ஒன்று.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment