வணக்கம்!
ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். நாம் எடுக்கும் எந்த ஒரு செயலும் நடைபெறாது. பூர்வபுண்ணியம் தான் சரியில்லை நாம் சும்மா அமர்ந்துவிடமுடியாது உடனே நாம் குலதெய்வத்திடம் சரண் அடைந்தால் ஒரளவுக்கு நம்மை குலதெய்வம் காப்பாற்றிக்கொண்டே இருக்கும்.
ஒரு சில இடத்தில் குலதெய்வத்தின் அதிகமான சக்தி பூர்வபுண்ணியம் சரியில்லாத ஆட்களின் நிலையை பல மடங்கு உயர்த்தி நல்ல வாழவைத்துவிடும். புதன் கிரகம் அவர்களுக்கு நல்ல நிலைமையில் இருக்கும்.
அறிவை கொடுக்கும் கிரகம் நல்ல நிலையில் இருக்கும்பொழுது எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதனை புரிந்துக்கொண்டு செயல்படவைக்கும். நமக்கு வந்த பிரச்சினையை குலதெய்வம் தான் காக்க முடியும் என்று அறிந்து குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொண்டு வெற்றி பெற்றுவிடுவார்கள்.
அறிவு எந்தளவுக்கு ஒருவருக்கு கிடைக்கிறதோ அந்தளவுக்கு அவர் இந்த உலகத்தில் முன்னேற்றம் அடைந்துவிடுவார். உங்களுக்கு புதன் நன்றாக இருந்தால் இதற்கு குறைவில்லாமல் இருக்கும். உங்களுக்கு புதன் சரியில்லை என்றால் கஷ்டம் தான். அந்த நிலையிலும் நீங்கள் புதன்கிழமை தோறும் உங்களின் குலதெய்வம் சென்று வணங்கினால் இது சரியாகும்.
குலதெய்வத்தை வணங்குவதில் கூட டெக்னிக்கல் இருக்கின்றது. நமக்கு எது தேவையோ அதனை அறிந்து வணங்கும்பொழுது நமது தேவையை சரியாக குறிப்பட்ட காலத்திற்க்குள் முடித்துக்கொடுக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment