வணக்கம்!
ஒரு வீட்டிற்க்கு புனிதத்தை அதிகம் சேர்ப்பது அந்த வீட்டில் எரியும் நல்ல விளக்கு தான். நல்ல விளக்கு என்று சொல்லப்படுகின்ற காமாட்ஷி விளக்கு. இதனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று சுத்தம் செய்து அதனை தினமும் பயன்படுத்தவேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள கோவிலுக்கு சென்று நாம் தரிசனம் செய்துவிட்டு நம்முடைய வீட்டிற்க்கு வந்தால் அந்த புண்ணியத்தை எல்லாம் நமக்கு கொடுப்பது இந்த விளக்கு தான். எந்த ஒரு ஆன்மீகவாதியிடமும் இதனை கேட்டால் சொல்லுவார்கள்.
நல்ல விளக்கு வீட்டிற்க்குள் எரியும்பொழுது நமது வீட்டில் உள்ள பின்கதவு திறந்து இருக்ககூடாது என்பார்கள். நமது வீட்டிற்க்கு முன்புறம் ஒரு கதவும் பின்புறம் அதாவது கொல்லைபக்க கதவு என்பார்கள் அல்லவா இது இருக்கும் வீட்டில் பின்புறம் உள்ள கதவு நல்ல விளக்கு எரியும்பொழுது திறந்திருக்ககூடாது.
உங்களின் வீட்டில் நல்ல விளக்கை ஏற்றிவிட்டு பின்புறம் உள்ள கதவு திறந்து இருந்தால் உங்களின் வீட்டிற்க்கு வரும் அனைத்து செல்வவளங்கள் மற்றும் நல்ல விசயங்கள் அனைத்தும் பின்னால் உள்ள கதவால் போய்விடும்.
நல்லவிளக்கை அணைப்பதற்க்கு என்று ஒரு சில விதிகளும் இருக்கின்றது இதனைப்பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் உங்களின் வீட்டில் உங்களின் மனைவி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்பொழுது நல்ல விளக்கை அணைக்ககூடாது இது ஒரு விதி.
நல்லவிளக்கை அணைக்கும்பொழுது மிகுந்த பக்தியோடு மெதுவாக ஒரு பூவைக்கொண்டு அணைக்கலாம். பூ இல்லை என்றால் ஒரு குச்சி அல்லது ஒரு பொருளைக்கொண்டு அணைக்கும்பொழுது எரிந்த திரி உள்ளே உள்ள எண்ணெய்க்குள் சென்றுவிடவேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உங்களின் வீட்டில் அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment