Followers

Thursday, July 6, 2017

கேள்வி & பதில்


ணக்கம்!
          நேற்று பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு வருகின்றனர். நல்ல விசயம் தான். அதில் ஒரு நண்பர் சொன்னார். எத்தனை தான் செய்வது. தினமும் ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே வருகின்றீர்கள். அது எங்களுக்கு சரியாக இருந்தாலும் எதனை செய்து தெளிவு பெறுவது என்று கேட்டார்.

பல வருடங்களாக பதிவை எழுதிக்கொண்டு வருகிறேன். தினமும் ஏதாவது ஒரு தகவல்கள் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதில் உங்களுக்கு எது செட்டாகிறது என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது ஒன்று செயல்படும்.

எதையாவது சொல்லி பணத்தை பறிக்கவேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. என்னால் முடிந்தளவுக்கு பிறர்க்கு செய்துக்கொடுக்கவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம்.

ஒரு மனிதன் பிறந்தால் அவனை போல் வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக நாம் சொல்லும் விசயங்கள் செயல்படும். அதனால் புதிய புதிய தகவல்களை சொல்லிக்கொண்டு வருகிறேன்.

நேற்று சொன்ன விசயம் பொதுவாக அனைவருக்கும் செயல்படக்கூடிய ஒன்று. அதில் சொல்லப்பட்ட கருத்துகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் அகப்படுவீர்கள். அதற்கு அனைத்திற்க்கும் ஒரே காரணம் தான் இருக்கின்றது. அதனை நீங்கள் செய்துக்கொள்ளுங்கள்.

கொஞ்சம் முயற்சி செய்தால் போதும். நீங்கள் அதில் இருந்து விடுபட்டுவிடுவீர்கள். இந்த ஜென்மம் எடுத்ததின் அர்த்தம். இதில் இருந்து விடுபடுதல் அனைத்தும் நடைபெற்றுவிடும். தொடர்புக்கொள்ளுங்கள் அது என்ன என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: