வணக்கம்!
ஜாதககதம்பத்தில் அதிகமாக கொடுத்திருப்பது டிப்ஸ்கள் தான். எப்படி எல்லாம் ஆன்மீகத்திலும் சோதிடத்திலும் சிறந்து விளங்க எப்படிப்பட்ட வழிகளை எல்லாம் பின்பற்றலாம் என்று இருக்கும். இதனை பல பதிவுகளை படித்தாலே தெரியும்.
குரு பூர்ணிமா சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுகிழமை வரை இருந்தது. குரு பூர்ணிமா முழுநிலவு சனிக்கிழமை இரவு முழுவதும். இந்த நாளில் நமக்கு நல்லவழி கொடுக்கும் அனைத்து குருவுக்கும் நன்றியை செலுத்தும் விதமாகவும் அவர்களிடம் இருக்கும் சக்திக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும் பயன்படுத்தவேண்டும்.
எனக்கு பல நல்ல விசயங்களை கொடுத்த ஆன்மீக குருவுக்கும். நிறைய இந்த உலகத்தில் கற்றுக்கொடுக்கும் அனைவருக்கும் குருவாக ஏற்றுக்கொண்டு அவர்களை தொடர்புக்கொண்டு நல்ல ஆசியை வாங்கினேன்.
ஜாதககதம்பத்தில் இருந்து ஒரே ஒரு நபர் மட்டும் என்னை தொடர்புக்கொண்டு எனக்கு உங்களின் ஆசியை தாருங்கள் என்று கேட்டார். இவ்வளவு பேர்களில் ஒருவர் மட்டுமாவது தொடர்புக்கொள்கிறார் என்று பெருமைபட்டேன்.
இங்கே வருபவர்கள் பலர் பணத்தை அனுப்புகின்றனர். இவர்கள் எல்லாம் இந்த விசயத்தில் தவறவிட்டுவிட்டனர் என்று சொல்லலாம். எனக்கு மரியாதை தரவேண்டும் என்ற நோக்கம் அல்ல. மாறாக என்னிடம் இருக்கும் சக்திக்கு மரியாதை கொடுத்தால் அது தான் மிகப்பெரிய ஆசியாக உங்களுக்கு இருக்கும். டிப்ஸ் என்பதே எதையும் தவறவிடாமல் பெற்றுக்கொள்வது தான் என்பதை இந்த நேரத்தில் மறுபடியும் சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment