Followers

Friday, July 7, 2017

உலகம் கொடுக்கும் வாய்ப்பு


ணக்கம்!
          ஒரு வேலையை கொடுத்து அந்த வேலையை முடிக்காமல் இழுத்தடிக்ககூடாது என்பது என்னுடைய கருத்து. முடிந்தவரை எவ்வளவு விரைவில் அதனை முடிக்கிறோமாே அவ்வளவு விரைவில் அதனை முடித்துவிடவேண்டும்.

நான் சொல்லுவது ஆன்மீகவேலையாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதனை விரைவில் முடிக்க ஆசைப்படுபவன். இருக்கின்ற காலத்தில் அனைத்தையும் முடித்துவிட்டால் நல்லது என்று நினைப்பேன். நாளை என்பது நம்மிடம் இல்லை இருக்கின்ற இன்றைய நாளில் எந்தந்த வேலையே அதனை முடிக்கவேண்டும்.

எதற்க்காக இதனை சொல்லுகிறேன் என்றால் நம் முன்னாடி கொண்டுவந்து கொடுக்கின்ற வாய்ப்பு மறுபடியும் இந்த உலகம் கொடுக்குமா என்பது சந்தேகமே. என்னுடைய பல நல்ல ஆன்மீகவாதிகள் பழக்கம் உண்டு. அவர்கள் எல்லாேரும் இந்த வழியை பின்பற்றுபவர்கள்.

என்னிடம் அவர்கள் எல்லாம் சொல்லுவது இது வாய்ப்பாகவும் இருக்கலாம் அல்லது இதன் வழியாக ஒரு அனுபவத்தையும் இந்த உலகம் நமக்கு கொடுக்கிறதற்க்கும் இருக்கலாம். வருகின்றதை செய்துவிடு மற்றயவை அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்பார்கள்.

இந்த கருத்தை ஏற்று நான் பல வேலைகளை தள்ளி போடுவது கிடையாது. முடிந்தவரை வேகமாக என்ன என்ன செய்யமுடியுமோ அதனை எல்லாம் செய்துவிடுகிறேன். 

நீங்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள். அன்றைக்கு வரும் வாய்ப்பை எல்லாவற்றையும் செய்யுங்கள். இந்த உலகம் உங்களுக்கு நிறைய கொடுக்க ஆரம்பிக்கும். நீங்கள் விரைவில் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: