Followers

Tuesday, July 11, 2017

பூர்வபுண்ணியத்தில் செவ்வாய்


வணக்கம்!
         பூர்வபுண்ணியம் என்று சொல்லக்கூடிய இடத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் என்பது உங்களுக்கு தெரியும். உயர்வை தரக்கூடிய இடத்தில் போர்கிரகம் நின்றால் சண்டை சச்சரவு தான் இருக்கும். 

மனிதனை அழிக்ககூடிய ஒரு பெரிய ஆயுதம் என்றால் அது அவனுடைய கோபம். கோபத்தை எந்த விதத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்பவன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவான். 

கோபம் இல்லாமல் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருந்தாலே அவனை தேடி அனைத்து வாய்ப்புகளும் வந்துவிடும். இன்றைய காலத்தில் பல பேர்கள் இதனை தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும். 

நன்றாக படித்து கோபம் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் கூட பல நிலையில் தோல்வி அடைவதற்க்கு காரணம் அவர்களின் கோபம் தான். எப்படி என்கிறீர்களாக படித்தவர்கள் வெளிக்காட்டு கோபம் எப்படி இருக்கும் என்றால் அவர்கள் ஒருவர் மீது கோபப்பட்டால் அவர்களை தவிர்க்க பார்ப்பார்கள். நேரிடையாக கோபத்தை காட்டுவதை விட இது அதிகமான ஒரு கோபமாகவே இருக்கும்.

கோபத்தை வெளிப்படுத்தும் தன்மை அடுத்தவர்களை தவிர்ப்பது. இதனால் தான் பல பேர்கள் இன்று வாழ்வில் தோல்வியை தழுவுகின்றனர். ஐந்தில் செவ்வாய் நின்றால் உங்களுக்கு கோபத்தை கொடுத்து அது உங்களின் வாழ்வை கெடுக்கும். கோபத்தை காட்டாமல் அன்பை காட்டுங்கள். 

மேற்கண்ட படி உங்களின் நடவடிக்கை இருந்தால் நீங்கள் உங்களின் ஜாதகத்தை அனுப்பி பரிகாரம் செய்துங்கள். கண்டிப்பாக நல்ல மாற்றத்தை நீங்கள் பெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: