வணக்கம்!
அதிக விலை உடைகளை உடுத்துவதில் அதிக விருப்பம் எனக்கு இருக்காது. அதிக விலைக்கொடுத்து உடையை வாங்கி அதனை அணிவது கிடையாது. சாதாரணமான உடைகளை வாங்கி அதனை அணிவேன்.
விலையுர்ந்த ஆடைகளை நமது நண்பர்களிடம் எப்பொழுதாவது எடுத்துக்கொடுங்கள் என்பேன். அதற்கு காரணம் அவர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதற்க்காக இதனை கேட்பது உண்டு. இது எப்பொழுதாவது தான் கேட்பேன்.
தற்பொழுது ஆடி மாதம் நடைபெறுகிறது அல்லவா. துணிகளை குறைந்த விலைக்கு தருகிறேன் என்று ஜவுளிகடை விளம்பரம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்களால் முடிந்த துணிகளை அவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.
பெண்களுக்கு புடவை அல்லது அவர்கள் விரும்பும் ஆடைகளை வாங்கிக்கொடுங்கள். தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களை அழைத்தக்கொண்டு அவர்களுக்கு பிடித்த துணிகளை வாங்கிக்கொடுங்கள்.
ஆடை தானம் என்பது மிக உயர்ந்த ஒன்று. இதனை அடிக்கடி செய்யமுடியாவிட்டாலும் இப்படிப்பட்ட நேரத்தில் வாங்கிக்கொடுத்துவிட்டால் உங்களுக்கும் நல்லது. துணிகளை அவர்களிடம் கொடுத்தால் நமது பாவம் அவர்களுக்கு சென்றுவிடும் என்று பயப்படதேவையில்லை. பாவம் செல்லவே செல்லாது.
சுக்கிரனின் முழுமையான ஆற்றல் இந்த செயலில் இருக்கின்றது. இதனை நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு செல்வவளத்தை வாரி வழங்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. உடனே செயல்பட துவங்குங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment