வணக்கம்!
பெற்றோர்களுக்கு செய்யவேண்டியதை செய்துவிடவேண்டும். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவிட்டாலும் அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்க்கு வழி செய்துவிடவேண்டும்.
நிறைய பேர்களை நான் கவனித்து இருக்கிறேன். அமாவாசை விரதம் எல்லாம் பிடிப்பார்கள் ஆனால் அவர்களின் பெற்றோர்களுக்கு எதுவும் செய்வதில்லை. பெற்றோர்களுக்கு செய்யாமல் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு அவர்கள் இறந்த பிறகு அமாவாசை விரதம் பிடிப்பது வீணான ஒன்று.
நவீன உலகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மனிதனுக்கு தன்னை வெளிக்காட்டிக்கொள்ள எதையாவது செய்யவேண்டும் என்று இந்த அமாவாசை விரதம் பிடிப்பதும் ஒரு வழக்கமாக இருக்கின்றது. வெளிக்காட்டிக்கொள்வதற்க்கு அமாவாசை விரதம் பிடிக்ககூடாது.
உங்களோடு இருப்பது அதிகப்பட்சம் உங்களின் பெற்றோர்கள் தான் இவர்கள் வழியாக தான் நீங்கள் இங்கு வந்தீர்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டாலும் குறைந்தப்பட்சம் அவர்கள் வாழ்வதற்க்கு வழி செய்துக்கொடுக்கவேண்டும்.
உயிரோடு இருக்கும் வரை நல்லது செய்தோம் அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்காக அமாவாசை விரதம் இருக்கிறோம் என்று நீங்கள் விரதம் இருந்தால் அவர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு அற்புதமாக கிடைக்கும். நீங்கள் தொட்டது எல்லாம் விளங்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அய்யா
நானும் உங்களுடைய கட்சிதான்
Post a Comment