வணக்கம்!
சனியைப்பற்றி எழுத வேண்டிய ஒரு சூழ்நிலை இன்று உருவாகியது. சனியால் பாதிக்கப்பட்ட நிறைய ஜாதகங்கள் காலையில் இருந்து பார்க்கவேண்டியதாகிவிட்டது. ஒரு நாளைக்கு காலையில் எப்படிப்பட்ட ஜாதகங்கள் வருகின்றதோ அதற்கு தகுந்தார் போல் தான் அன்றைய நாள் முழுவதும் ஜாதகங்கள் வரும்.
ஒன்றை உங்களிடம் சொல்லிவிடுகிறேன். சோதிடர்கள் சொல்லுவது போல் சனிக்கிரகம் தீயக்கிரகம் கிடையாது. சனிக்கிரகம் தன்னுடைய பலனை ஜாதகனுக்கு கொடுக்கமுடியாமல் போகும்பொழுது தான் ஜாதகன் பிரச்சினையில் சிக்குகிறான்.
ஏழரை சனி கண்ட சனி அஷ்டமசனி மற்றும் சனியின் தீயபலன்கள் கொடுக்கும் காலத்தில் சனிக்கிரகத்தின் சக்தி மனிதனுக்கு கிடைப்பதில்லை அப்படியே சனிக்கிரகத்தின் சக்தி கிடைத்தாலும் அது அவனின் உடலை மட்டும் காப்பாற்றவேண்டிய ஒரு நிலையில் இருக்கும்.
மேலே சொன்ன காலக்கட்டத்தில் ஒரு மனிதனுடைய தொழில் மற்றும் வேலைகளில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தியே தீரும் என்பது தான் உண்மை. சனியின் பலன் கிடைக்கவில்லை என்றால் தொழில்க்காரகன் எப்படி தொழிலை நன்றாக கொடுக்கமுடியும்.
சனிக்கிரகம் தன்னுடைய சக்தியை எப்படி கொடுக்கும் என்பதை அறிந்து அதற்கு தகுந்தார் போல் நீங்கள் பரிகாரம் செய்துக்கொள்ளலாம் அல்லது மற்றவழிகளை பின்பற்றலாம். நமது சனிப்பெயர்ச்சி பரிகாரத்திலும் கலந்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment