Followers

Monday, October 28, 2013

இரு குலதெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது பதிவில் குலதெய்வவழிப்பாட்டைப்பற்றி சொல்லி கொஞ்சம் நாள் சென்று விட்டது ஒரு நண்பரால் அது மீண்டும் இன்று நினைப்பை ஏற்படுத்தியது. அவருக்கு சொன்ன அந்த பதிலை உங்களுக்கு சொல்லுகிறேன்.

நண்பர் கேட்டுருந்தார் நாங்கள் இதுவரை ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டு இருந்தோம் ஆனால் எங்களின் உறவினர்கள் அது உங்களின் குலதெய்வம் கிடையாது. வேறு ஒரு தெய்வம் தான் குலதெய்வம் என்று சொன்னார். நாங்கள் எதனை வணங்குவது என்று கேட்டுருந்தார். 

நண்பரின் குடும்பத்திற்க்கு நடந்தது மாதிரி பலருக்கு நடைபெற்று இருக்கிறது. இரண்டையும் வணங்கி வரலாம். ஏன் என்றால் ஒரு தெய்வத்தை நீங்கள் வணங்கிக்கொண்டு வருகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது உங்களை காத்துக்கொண்டு தான் இருக்கும். திடீர் என புதியதாக ஒரு தெய்வம் என்று நீங்கள் உடனே புதிய தெய்வத்திடம் சென்றால் ஏற்கனவே இருந்த தெய்வம் கோபம் கொண்டு உங்களுக்கு ஏதாவது செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது அதனால் இரண்டு தெய்வத்தையும் வணங்கிவாருங்கள்.

உங்களுக்கு பிறகு வேண்டும் என்றால் படிப்படியாக அந்த பழைய தெய்வத்தின் வழிப்பாட்டை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். இதிலும் அந்த தெய்வத்திற்க்கு உங்களை விட்டால் யாரும் பூஜை செய்வதில்லை என்றால் உங்களின் குடும்பமே அதனை எடு்த்து செய்துவருவது நல்லது.

நீங்கள் கும்பிடும் பழைய தெய்வம் நன்றாக உங்களுக்கு செய்யும் பட்சத்தில் அதனை உங்களின் குடும்பமே பின்பற்றிவருவது நல்லது. இரண்டு குலதெயவத்தை இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வணங்கிவருவது தப்பில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...


Dear Sir,

I already ask this requested question.I was chirstian .Now i come and believe in to hindu.How i choose my Kula Deivam.
Please do the needful
Thanks
Antony