வணக்கம்!
எங்களின் பகுதியில் வெயில் அடிக்கிறது என்றால் ஒரு சாதாரணமான வெயில் கிடையாது. சூரியன் கீழே இறங்கி வந்தது போல் இருக்கின்றது. வெளியில் தலைகாட்டமுடியாதபடி இருக்கின்றது.
தண்ணீர் பிரச்சினை என்றால் தெரியாத ஊரில் தண்ணீர் பிரச்சினை வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்திற்க்கு முன்பு என்றே எழுதவேண்டும் தஞ்சாவூரில் இருந்து பஸ்ஸில் ஏறி பட்டுக்கோட்டை கும்பகோணம் மன்னார்குடி இந்த பகுதிக்கு சென்றால் அப்படியே உங்களை குளிர்மை படுத்திவிடும்.
எங்கு பார்த்தாலும் பச்சையாகவே இருக்கும். உங்களின் உடல் மனம் அப்படியே குதுகாலிக்கும். அப்படியே கண்களுக்கு தெரிகின்ற கோவில் உங்களின் ஆத்மாவும் ஆனந்தம் அடையும். மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று நினைப்பீர்கள்.
தற்பொழுது நீங்கள் வந்தால் தஞ்சாவூர் பக்கம் ஏண்டா வந்தோம் என்று தோன்றும். ஒரே பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. எல்லாம் கால மாற்றம். மனிதனும் தவறு செய்கிறான்.
அரசாங்கமும் நிலக்கரி எடுக்கிறேன் மீத்தேன் எடுக்கிறேன் இன்னமும் ஏதோ ஆராய்ச்சி செய்கிறேன் என்று செய்து இருந்த தண்ணீரையும் காலி செய்துவிட்டார்கள். தற்பொழுது எங்களின் பாடு கஷ்டமாக தான் இருக்கின்றது. கடவுளாக பார்த்து செய்தால் தான் உண்டு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அய்யா
எங்கள் பக்கமும் அப்படித்தான் குடிதண்ணீருக்கு பெண்கள் பல மைல்கள் நடந்து கொண்டு வருகிறார்கள்.
Post a Comment