வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானத்தின் தசா நடந்தால் அவர்களுக்கு பல வழிகளிலும் தொந்தரவு என்பது இருந்துக்கொண்டு இருக்கும். ஒரு சிலருக்கு அது மாரகமாகவும் அமைந்துவிடுகிறது. விபத்து வரும் அது எப்படி மாரகம் வரும் என்று நினைக்கதோன்றும்.
விபத்தினால் மரணம் வருவது போல் அமைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு கோமா நிலைக்கு சென்ற பிறகு மரணத்தை அடைவதும் இந்த மறைவு ஸ்தான அதிபதி தசாவில் நடக்கும்.
மரணத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்பதற்க்காக மேலே சொன்ன கருத்தை சொன்னேன். இன்றைய காலத்தில் நிறைய பேர்கள் புண்ணியம் செய்யவேண்டும் என்பதற்க்காக நிறைய புண்ணியம் செய்யவேண்டும் என்று செய்கிறார்கள்.
புண்ணியம் செய்யவேண்டியது தான் அது அதிகமாக செய்தால் அதற்கு தகுந்தார்போல் உடனே மரணத்தை கொடுத்துவிடும். நிறைய புண்ணியம் செய்தான் இளம்வயதில் மரணம் அடைந்துவிட்டான் என்பார்கள்.
புண்ணியம் செய்தாலும் அவ்வப்பொழுது அதற்கு தகுந்தார்போல் கர்மாவையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். கொஞ்சம் கர்மாவையும் வைத்துக்கொண்டு இருந்தால் வாழ்நாளை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அண்ணா வணக்கம் ....ஒருவன் அதிகம் பாவம் செய்தாலோ அல்லது அதிக புண்ணியம் செய்தாலோ அவரின் விதி முடியும் நேரத்தில் தான் மரணம் வரும் என்று படித்திருக்கிறேன் ...நீங்கள் சொல்வது மாறுபட்ட கருத்தாக உள்ளதே அண்ணா????
Post a Comment