Followers

Monday, September 26, 2016

பயண அனுபவம் பகுதி 1


ணக்கம்!
          பயணத்தைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். எந்த ஒரு பயணத்திலும் இல்லாத ஒரு தனிசிறப்பு இந்த முறை தென்தமிழக பயணத்தில் இருந்தது. முதல்நாள் மாலை நெல்லை இறங்கியவுடன் முதலில் எப்படியும் நெல்லையப்பரை சந்தித்துவிடவேண்டும் என்று நண்பரிடம் சொன்னேன். அவரும் அதற்கு ஏற்பாடு செய்துக்கொடுத்து தரிசனம் செய்ய வைத்தார். நெல்லையப்பர் கோவிலை முழுமையாக தரிசனம் செய்தேன்.

நெல்லையை நான் சென்றடைந்தது நேரமாகிவிட்டது. மாலையில் யாரும் என்னை சந்திப்பார்கள் என்று எண்ணி தான் பதிவில் சொல்லிருந்தேன். பதிவு அந்தளவுக்கு பாேய் சேரவில்லை என்று நினைக்கிறேன். யாரும் கூப்பிடவில்லை.

ஒவ்வொருவரும் தன்னுடைய ஆன்மீகபயணத்தை வாழ்வில் பெறவேண்டும் என்பது எனது ஆசை அந்த ஆன்மீகபயணத்தை நீங்கள் செல்லும்பொழுது மறக்காமல் நெல்லையில் உள்ள காந்திமதி நெல்லயப்பர் கோவிலையும் தரிசனம் செய்யுங்கள். 

நெல்லையப்பரை தரிசனம் செய்துவிட்டு நேராக ஸ்ரீவைகுண்டத்திற்க்கு சென்று தங்கிவிட்டேன். மறுநாள் காலையில் நான் சென்றதின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தேன். 

நவதிருப்பதி என்ற சொல்லக்ககூடிய பெருமாள் கோவிலில் நான்கு கோவிலை தரிசனம் செய்தோம். மீதியை அடுத்த முறை செல்லும்பொழுது தரிசனம் செய்யவேண்டும். ஒவ்வொரு பெருமாள் கோவிலும் பார்க்க நன்றாக இருக்கின்றது. நல்ல தரிசனம் கிடைத்தது.

ஆள்வார்தோப்பு என்று சொல்லக்கூடிய ஊரில் அமைந்திருக்கும் ஒரு சில ஜீவசமாதியை தரிசனம் செய்தோம்.  ஒரு சமாதியில் திருசெந்தூர் கோபுரத்தை கட்டிய ஒரு மகானின் சமாதியும் இருக்கின்றது. 

ஜீவசமாதியை முடித்துவிட்டு அருகில் உள்ள ஏகாந்த லிங்க சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று சென்றோம். கோவில் நடைசாத்திவிட்டார்கள் அப்படி இருந்தும் அந்த கோவிலை பார்த்தோம் அதில் பல விசங்கள் நமக்கு கிடைத்தது.

கருவூர் சித்தருக்கு காட்சி தந்த ஸ்தலம் என்ற பெருமை உடையது. கருவூர் சித்தரின் நாய்க்கு மோட்சம் அளித்த தலம் என்ற பெருமையும் உடையது இந்த தலம். ஏதோ முற்பிறவியில் நாம் புண்ணியம் செய்து இருக்கவேண்டும் இப்படிப்பட்ட இடத்திற்க்கு நம்மை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தேன்.

இந்த தரிசனம் முடித்துவிட்டு நேராக நண்பரின் வீட்டிற்க்கு சென்று மதியம் உணவை முடித்துவிட்டு சிறிய நேரம் உட்கார்ந்துவிட்டு மறுபடியும் பயணம் திருசெந்தூரை நோக்கி இருந்தது.

பயணம் தொடரும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: