வணக்கம்!
ஏதோ ஒரு கிரகத்தி்ன் பாதிப்பு பெரிய அளவில் நம்மை தாக்கும்பொழுது நாம் நிலைகுலைந்து போகிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று ஜாதகத்தை தூக்கிக்கொண்டு சோதிடரை நோக்கி ஓடிவிடுகிறோம்.
கஷ்டத்தை நம்மால் ஏன் தாங்கிக்கொள்ளமுடிவதில்லை என்று ஒரு கணம் சிந்தித்து பார்த்தால் நாம் எதற்க்கும் பயப்படமாட்டோம். கஷ்டத்தை நாம் முதலில் அனுபவிக்கவில்லை என்பது தான் உண்மையான ஒரு விசயம்.
என்ன கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா என்று கேட்கதோன்றும். சந்தோஷத்தை அனுபவிக்கிறோம் அல்லவா அது போல கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டால் நமக்கு கஷ்டம் என்பது அதிகம் வரபோவதில்லை.
வாரஇறுதியில் ஏதோ ஒரு வெளி இடத்திற்க்கு சென்று நாம் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறோம் நமக்கு என்ன என்ன தேவையோ அதனை எல்லாவற்றையும் மகிழ்வோடு கொண்டாடிக்கொண்டு வருகிறோம். கஷ்டத்தை அனுபவிக்கவேண்டும் என்று ஒரு நாள் நாம் நினைத்து இருக்கிறோமா?
கஷ்டத்தை எதிர்க்கொள்ள நமக்கு சக்தி என்பது வேண்டும். அது எப்பொழுது நமக்கு கிடைக்கும் என்றால் நாம் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருப்போம் அல்லவா. வீட்டில் இருக்கும்பொழுது அதாவது சும்மா இருக்கும்பொழுது நமக்கு என்ன தோன்றும் அட என்ன டா போர் அடிக்கிறது டிவியை ஆன் செய்து பார்ப்போம் அல்லது ஏதாவது சினிமாவிற்க்கு போவோம். இன்று போர் அடிக்கிறது என்றால் அதிக பேர் மது அருந்த சென்றுவிடுகிறார்கள். உங்களுக்கு வருகின்ற கஷ்டத்தை எதிர்நோக்காமல் டைவர்ட் செய்து சென்றுவிடுகிறோம்.
கஷ்டத்தை ஒருவரும் அனுபவிக்காமல் அப்படியே சேர்த்து சேர்த்து வைத்துக்கொண்டு அது பெரிய அளவில் உருவாகிவிடுகிறது. அது நம்மை பெரிய அளவில் அடிக்கும்பொழுது நம்மால் எதிர்க்கொள்ளமுடியாமல் கஷ்டத்தில் மாட்டிக்கொள்கிறோம்.
நமக்கு போர்அடிக்கும் நேரத்தில் எதிலும் டைவர்ட் ஆகாமல் அப்படியே அதனை எதிர்க்கொள்ள ஆரம்பியுங்கள். எந்த கஷ்டமும் உங்களுக்கு வரவே வராது அப்படியே சின்ன கஷ்டம் கூட வந்தாலும் அதனை நீங்கள் எளிதில் சமாளிக்கமுடியும்.
மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது டிவி பார்க்கவேண்டும். கவலையாக இருக்கும்பொழுது கவலையை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாம் நேரத்தையும் டிவியை பார்த்தே போக்கிக்கொண்டு இருந்தால் ஏழரை சனி அஷ்டமசனி அர்த்தாஷ்டம சனி இன்னும் பல கிரகங்களின் கொடுரபிடியில் தனிமையை மட்டுமே அதாவது ஜெயில் வாழ்க்கையில் இருப்பது போலவே ஆகிவிடும்.
பல ஆன்மீக பயிற்சிகள் மற்றும் எளிதில் உங்களை மாற்றும் வழிகள் எல்லாம் நமது கட்டண சேவையில் இருக்கின்றது உடனே அதில் இணைந்து உங்களின் வாழ்க்கையை நல்ல வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுங்கள்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பிவைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment