வணக்கம்!
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகம் இணைந்து இருந்தால் அவர்களின் குணம் பெரும்பாலும் சண்டை போடுவது போல தான் இருப்பார்கள். அதிகமாக சத்தம் போட்டு பேசி சண்டை போடுபவர்கள் எல்லாம் சந்திரன் செவ்வாய் சேர்ந்து இருக்கின்ற ஆள்களாக தான் இருப்பார்கள்.
சந்திரன் செவ்வாய் கிரகம் இணையும்பொழுது உடல் அதிகமாக சூட்டோடு இருக்கும் அதோடு உடல் வியர்வையும் அதிகமாக இருக்கும். எப்பொழுதும் ஒரு வித டென்ஷன் இருப்பதால் இப்படி இருக்கலாம்.
சந்திரன் செவ்வாய் இணையும்பொழுது தனக்கு வருகின்ற துணையோடு அதிகமாக வாய்தகராறு ஏற்படும். இது ஏழில் சம்பந்தப்படும்பொழுது இன்னும் அதிகமாக சென்று விவாகாரத்து வரை செல்லும்.
செவ்வாய் சந்திரன் இணைந்த ஜாதகர்கள் நல்ல தைரியத்தோடு இருப்பார்கள். அதனை வைத்து நிறைய நல்லதை செய்யமுடியும். பலர் இதனை வைத்துக்கொண்டு நன்றாகவும் இருக்கின்றனர்.
செவ்வாய் சந்திரன் இணைந்த ஜாதகர்கள் அதிகம் விரதம் இருக்கவேண்டும். செவ்வாய்க்கும் மற்றும் சந்திரனுக்கு சேர்ந்து அர்ச்சனை செய்யவேண்டும். தியானமும் செய்யலாம்.
செவ்வாய் சந்திரன் இணைந்து உங்களுக்கு பிரச்சினை இருந்தால் வீட்டில் முருகனுக்காக செவ்வாய் அல்லது திங்கள்கிழமையில் அன்னதானம் செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment