Followers

Thursday, September 8, 2016

குருவும் சந்திரனும்


ணக்கம்!
          குரு கிரகத்திற்க்கு மட்டும் ஒரு தனி அந்தஸ்து இருக்கின்றது என்றால் அது ஒரு சுபக்கிரகம் என்பதால் தான். ஒன்பது கிரகங்களில் முழுசுபர் குரு ஒருவரே. ஒருவருடைய ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருந்தால் அவருக்கு எல்லாம் நல்லவையாக நடக்கும்.

குரு சந்திரனும் சேர்ந்து இருப்பவர்கள் சொல்லும் யோசனை எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். நல்ல யோசனையை சொல்லுவார்கள் அவர்கள் சொல்லும் அறிவால் பலர் பயன்பெறும் படி இருக்கும். 

இன்றைய காலத்தில் ஒருவர் அறிவுரை சொல்லுகிறேன் என்று சொல்லி பலருக்கு பிரச்சினை தருவதாக தான் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் சொல்லும் கருத்தாக இருக்கும். உங்களுக்கு ஒருத்தர் அறிவுரை சொன்னால் அது எப்படியும் உங்களை சிக்க வைப்பது போலவே இருக்கும்.

ஒவ்வொருவரும் தான் வாழவில்லை என்றால் பிறரை சிக்க வைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். முக்கால்வாசி பேருக்கு கிரகங்கள் அப்படி இருக்கின்றது. அவர்களை சொல்லி குற்றம் இல்லை கிரகங்கள் அவர்களின் ஜாதகத்தில் அப்படி வேலை செய்கிறது.

குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் சொல்லும் அறிவுரை நம்மை உயர்த்துவதாக இருக்கும். அதனை நாம் பின்பற்றினால் பலருக்கு நல்லது நடக்கும் என்பது மட்டும் அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: