வணக்கம்!
ஒவ்வொருவரும் நிறைய ஹோமம் உங்களின் வீட்டில் செய்வீர்கள். நம்முடைய வீட்டில் அக்னியை வைத்து ஹோமம் செய்வதே நமது கோரிக்கையை அக்னி எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தெய்வத்திற்க்கு சேர்க்கும் என்ற நம்பிக்கை.
அக்னி கடவுள் என்றால் செவ்வாய் கிரகம் மற்றும் சூரியன் கிரகம் என்று நாம் சொல்லுகிறோம். அக்னி என்பது விரைவாக எடுத்துக்கொண்டு நம்முடைய கோரிக்கையை சேர்க்கும். நவகிரகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகம் அதிக விரைவாக செயல்பட்டு நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றும்.
உங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதத்தில் நமது வாடிக்கையாளர்க்கு அவர்களின் வேண்டுகோளில் படி ஹோமம் செய்து கொடுப்பது வழக்கம்.
இந்த ஹோமத்தில் உங்களின் முன்னோர்கள் செய்த புண்ணியம் மற்றும் நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை எடுக்கமுடியும். பல நண்பர்களுக்கு இதனை செய்துக்கொடுத்து இருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கின்றது.
பொதுவாக நான் யாருக்கும் இதனை எல்லாம் பரிந்துரை செய்வதில்லை. அதாவது ஒவ்வொருவரும் விரும்பினால் இதனை செய்துக்கொடுப்பது உண்டு. பரிகாரம் என்பது ஒரு தீபம் அல்லது அர்ச்சனையோடு முடித்துவிடுவது உண்டு.
அம்மனை வைத்து செய்யும் ஹோமத்தை எல்லாம் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை விரும்பி செய்ய சொன்னால் மட்டும் செய்வது உண்டு. உங்களுக்கு இப்படிப்பட்ட ஹோமம் எல்லாம் தேவை என்றால் அதற்கு என்று நீங்கள் கேட்டு என்னிடம் செய்துக்கொள்ளலாம்.
உங்களின் தேவை என்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் அதற்கு தகுந்தார் போல் நான் சொல்லிவிடுவேன். வெறும் ஜாதகபலன் பரிகாரம் என்றால் இதனை சொல்லுவதில்லை. உங்களுக்கு என்ன தேவை என்பதை சொல்லிவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment