வணக்கம்!
ஒருவருக்கு அஷ்டமசனி ஏழரைசனி நடைபெறும்பொழுது அவர்கள் சொல்லுவது போல் நடந்துக்கொள்ளமுடியாது. சனி அவர்களை பாதை திருப்பிவிட்டுவிடும்.
ஒருவர் ஆன்மீகபணி செய்துக்கொண்டு வந்தால் அவர்களுக்கு இப்படி ஏழரைசனி அஷ்டமசனி நடைபெறும் காலத்தில் அதில் இருந்து வெளியேற்றிவிடும்.
தெய்வபலன் கிடைக்காமல் செய்வதற்க்கு இப்படிப்பட்ட வேலையை செய்கிறது. தெய்வபலன் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ஏதாவது ஒரு சிக்கலில் சென்று மாட்டிக்கொள்ளட்டும் என்று இப்படி மாட்டிவிட்டுவிடும்.
மனிதர்கள் வாக்கு தவறகூடாது என்று சொல்லுவார்கள் அல்லவா. இந்த காலத்தில் எப்படிப்பட்டவர்களுக்கும் வாக்கு தவற வைத்துவிடுவார் சனிபகவான். வாக்கு தவறி பல கஷ்டத்திற்க்கு ஜாதகர் ஆளாவார்கள்.
தற்பொழுது ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி நடைபெறும் நண்பர்கள் உங்களை சுயபரிசோதனை செய்து பாருங்கள். நீங்கள் சொல்லுவது போல் நடந்துக்கொள்ளமுடியாது.
பல வழிகளிலும் உங்களை மாட்டிவிட என்ன செய்யவேண்டுமாே அதனை உங்களுக்கு தெரியாமல் செய்துவிடும். சுயஅறிவு என்பது அந்தளவுக்கு வேலை செய்யாது. சொல்அறிவை கேட்கவும் மாட்டீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment