Followers

Wednesday, September 14, 2016

தந்திரமூளைக்கு புதன்


வணக்கம்!
          புதன் கிரகம் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர் தன்னுடைய புத்தியை வைத்து நன்றாக பிழைத்துவிடுவார் என்று அடிக்கடி சொல்லுவது உண்டு.

இன்றைய காலத்தில் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கும் நபர்கள் அடிக்கடி என்னை தொடர்புக்கொண்டு வேலை பிரஷ்சர் அதிகமாக இருக்கின்றது சமாளிக்கமுடியவில்லை என்று என்னிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

வேலை என்று சென்றால் கண்டிப்பாக அங்கு அதிகமாக பிரஷ்சர் இருக்கதான் செய்யும். அதிலும் இந்தியன் சும்மா இருக்கவே மாட்டான். ஏதாவது ஒரு தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கிக்கொண்டு தான் இருப்பான்.

இதனை எல்லாம் சமாளித்து தான் நீங்கள் மேலே வரவேண்டும். இந்த உலகத்தில் எதுவும் நிலை இல்லை அதனால் இந்த வேலை பளு ஒரு விசயமே இல்லை என்று நீங்கள் நினைத்தால் அனைத்தையும் சாதித்துவிடலாம்.

இன்றைய வேலைக்கு நேர்மை மட்டும் இருந்தால் போதாது ஒரு சில தந்திர மூளையும் தேவைப்படும். தந்திரமூளை எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் புதன்கிரகம் நமக்கு சாதகமாக வேலை செய்யவேண்டும்.

பெரும்பாலும் ஒரு சிலருக்கு தான் இப்படி வேலை செய்கின்றது என்றாலும் நாமும் அதனை வழிபட்டு இப்படி தன்னுடைய மூளையை பலப்படுத்திக்கொள்ளலாம். புதன்கிரகத்திற்க்கு வாரம் ஒரு முறை சென்று வழிபட்டு வாருங்கள் அனைத்திலும் நீங்கள் ஜொலிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: