வணக்கம்!
பொதுவாக ஏழரை சனி நடக்கும் நண்பர்கள் தன்னுடைய முயற்சியை வைத்து நிறைய சாதனை செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். முயற்சியை மட்டும் வைத்துக்கொண்டு நிறைய சாதித்துவிடவேண்டும் என்று நினைப்பார்கள்.
ஒருவருக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி நடக்கும் காலத்தில் தெய்வீகசக்தி கொஞ்சம் விலகிவிடும். தெய்வீகசக்தி விலகிவிட்டால் நாம் எதனையும் செய்துவிடலாம் என்ற ஒரு பொய்யான தன்னம்பிக்கை வளர்த்து காலி செய்துவிடும் தன்மை சனி கிரகத்திற்க்கு உண்டு.
சனி பிடிக்கும்பொழுது மனிதனிடம் நாத்தீகத்தை வளர்த்துவிடும் தன்மை உண்டு. நாத்தீகம் ஆத்திகம் என்பதை விட நமது நேரம் மற்றும் நமது செல்வத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும். இழந்துவிட்டால் அதனை மறுபடியும் திரும்ப பெறுவது கடினமான ஒன்று என்பதால் சனிக்கு உரிய பரிகாரத்தை முறைபடி செய்துக்கொண்டு வேலையை தொடங்குங்கள்.
இன்றைக்கு இருக்கும் பெரிய பணக்காரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் சனியின் பிடியில் தான் இருந்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் ஆன்மீகத்தை எப்பொழுதும் விடமாட்டார்கள். உங்களுக்கு சனியின் பிடியில் இருந்தால் அதற்குரிய வழிபாட்டை மேற்க்கொண்டுவிட்டு அதன்பிறகு உங்களின் வேலையை தொடங்குங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment