Followers

Thursday, September 22, 2016

பத்தில் குரு


ணக்கம்!
          குரு பகவான் ஒருவருக்கு லக்கினத்தில் இருந்து பத்தாவது வீட்டில் அமைந்தால் அவருக்கு ஒரு நிரந்தரமான வேலை அமையாது என்று சொல்லுவார்கள். கோச்சாரபடி பத்தில் குரு வரும் காலம் பதவி போய்விடும் என்றும் சொல்லுவார்கள்.

பத்தாவது வீட்டில் குரு அமைந்தவர்களுக்கு நல்ல வேலையும் கிடைத்து இருக்கின்றது. ஒரு சிலருக்கு வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் சென்று வரும் வாய்ப்பும் இருக்கின்றது. அதே நேரத்தில் மாதம் ஒரு ஊரில் தங்கி வேலை பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது.

ஒரு சிலருக்கு மட்டும் அவ்வளவு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்காது. நிறைய அல்லல்படுவது போல் நடக்கிறது அதனாலும் கவலைபடதேவையில்லை குருவிற்க்கு வழிபாடு செய்து அந்த பிரச்சினையை சரி செய்துக்கொள்ளலாம்.

பத்தில் குரு இருந்தால் பிறரை வழி நடத்திச்செல்லும் வேலையை பார்த்து சேர்ந்துக்கொள்ளவேண்டும். அப்படி சேரும்பாெழுது அந்த வேலையை தொடர்ந்து செய்யலாம்.


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரிக்கு இன்று பயணம். நாளை ஆழ்வார்திருநகரியில் என்னை சந்திக்கலாம். இன்று மாலை திருநெல்வேலி வந்துவிடுவேன். திருநெல்வேலியில் உள்ள நமது நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் உடனே தொடர்புக்கொள்ளவும்.

இரண்டு நாட்கள் தென்தமிழகம் தான் பயணம் இருக்கும். சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

ஜோதிடம் பற்றி நிறைய தகவல் உங்கலின் தலம் மூலம் அறிய முடிகிறது மிக்க நன்றி