வணக்கம்!
செவ்வாய் கிரகத்தைப்பற்றி காலையில் பார்த்தோம். செவ்வாய் கிரகத்தோடு சனிக்கிரகம் இணையும்பொழுதும் அல்லது பார்வை படும்பொழுதும் அப்படி நடக்கிறது என்று சொன்னோம்.
ஒரு சிலருக்கு சனியின் வீடான மகரம் மற்றும் கும்ப ராசியினருக்கு செவ்வாய் காரத்துவம் உடைய ஆள்கள் பிரச்சினையை கொடுப்பார்கள். ஏட்டிக்கு போட்டி என்று சொல்வார்கள் அல்லவா அது போல் செய்வார்கள்.
உதாரணத்திற்க்கு மகரராசியினர் வீடு கட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது வீடு கட்டுபவர்கள் மகரராசியினர்களிடம் வம்பு செய்துக்கொண்டு வேலை செய்யாமல் செய்வார்கள்.
வீடு கட்டுவதற்க்கு மட்டும் இல்லை எந்த வேலை என்றாலும் அந்தளவுக்கு ஈடுபாடு காட்ட மாட்டார்கள். அதாவது வேண்டும் என்றே செய்பவர்களாக இருப்பார்கள். சனிக்கும் செவ்வாய்க்கும் அப்படி ஒரு சண்டை சச்சரவு என்றே சொல்லலாம்.
செவ்வாய் ராசியை உடையவர்களுக்கும் சனியின் ராசியை உடையவர்கள் இல்லாத வேலையை எல்லாம் செய்து அவர்களை கவிழ்ப்பார்கள். இது பொதுவான ஒரு பலன் மட்டுமே.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment