வணக்கம்!
திருசெந்தூர் சென்றடைந்து கடலில் குளித்துவிட்டு நாழி குணற்றில் குளித்துவிட்டு செந்தூர் முருகனை வழிபட சென்றோம். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலைப்பற்றி விபரம் தெரிந்தவர்களை அழைத்துக்கொண்டு சென்றால் தான் நாம் அனைத்தையும் தரிசனம் செய்யலாம் அந்தவிதத்தில் நண்பர் ஆழ்வார்திருநகரி விஜயராகவன் அவர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி சென்றார். முதலில் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு தான் முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்று அழைத்துக்கொண்டு சென்றார். கோவிலுக்கு வெளியில் அந்த விநாயகர் கோவில் இருக்கிறது. விநாயகரை தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்குள் சென்றோம்.
கோவிலில் கூட்டம் அதிகம் இல்லை. சரி இலவச தரிசனத்தில் சென்று தரிசனம் செய்துவிடலாம் என்று சென்றோம். முருகனை தரிசனம் செய்துவிட்டு பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம் என்று சென்றால் நீங்கள் இலவசத்தில் வந்துவிட்டீர்கள் கட்டணத்தில் வந்தால் தான் அதற்கு நீங்கள் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். மறுபடியும் கட்டண தரிசனம் டிக்கெட் வாங்கிக்கொண்டு தரிசனம் செய்துவிட்டு பஞ்சலிங்க தரிசனத்திற்க்கு தனியாக டிக்கெட் வாங்கிக்கொண்டு பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்தோம்.
உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லவேண்டும் என்பதற்க்காக தான் எழுதினேன். திருசெந்தூரை பொறுத்தவரை இந்த பஞ்சலிங்கம் தான் மிக மிக முக்கியமாக நீங்கள் தரிசிக்க வேண்டும். இதனை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்து வள்ளிகுகை சென்று தரிசனம் செய்தோம்.
திருசெந்தூர் முருகன் கோவிலுக்குள் சட்டை போடகூடாது என்று சொல்லுகின்றனர். சட்டை இல்லாமல் சென்று தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்கிறார்கள். நம்ம கோவிலில்களில் ஒரு தனிதன்மை என்ன என்றால் அங்குள்ள வெப்பம் தான். இந்த கோவிலுக்குள் சென்றால் ஏசி குத்து குத்து என்று குத்துகிறது. அந்தளவுக்கு குளிர் எதற்கு சட்டையை கழட்ட சொல்லுகின்றார்கள் என்பது மட்டும் விளங்கவில்லை..
தமிழ்கடவுள் தற்பொழுது மலையாள கடவுளாக மாறிக்கொண்டு வருகிறார். பழனி திருசெந்தூர் எல்லாம் அவர்களின் வசம் சென்றுவிட்டது என்பது மட்டும் உண்மை. முருகனைவிட பஞ்சலிங்கம் சூப்பர் என்பது மட்டும் என்னால் உங்களுக்கு சொல்லமுடியும்.
திருசெந்தூரை முடித்துக்கொண்டு திரும்பிவரும் வழியில் அம்மன்புரம் என்ற ஒரு ஊர் உள்ளது. பஸ்ஸ்டாப்பில் நின்று பார்த்தால் எதிராக மணிவிலாஸ் காரசேவு என்ற ஒரு கடை இருக்கின்றது. அங்கு சென்று 100 கிராம் காரசேவு வாங்கிக்கொண்டு அதனை சாப்பிட்டுக்கொண்டே ஒரு காபியை குடித்தால் அடடா பார்த்த கோவிலை விட இது சூப்பராக இருக்கின்றதே என்று தோன்றவைத்தது.
அம்மன்புரத்தில் இருந்து கிளம்பி வனதிருப்பதி கோவில் சென்றோம். வனதிருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து ஆழ்வார்திருநகரி வந்தோம்.
அடுத்த பதிவோடு பயணபதிவை முடித்துவிடுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment