Followers

Tuesday, September 27, 2016

புகழின் உச்சம் ராகு


வணக்கம்!
          விவேகானந்தரைப்பற்றி நீங்கள் படித்து இருப்பீர்கள். விவேகானந்தரைப்பற்றி தெரியாத ஆள் இருக்கமுடியாது அந்தளவுக்கு அவர் சிறந்து விளங்கியவர். அவர் சிறந்து விளங்குவதற்க்கு காரணம் ஒன்பது கிரகத்தில் ஏதோ ஒரு கிரகம் என்ற தான் ஒரு சோதிடர்களின் பார்வையாக இருக்கமுடியும்.

அவரின் ஜாதகத்தை நாம் அலச போவதில்லை. ஒரு சில விசயத்தை வைத்து சொல்லலாம் என்று இதனை உங்களிடம் சொல்லுகிறேன். விவேகானந்தர் ஒரு அறையில் தியானம் செய்துக்கொண்டு இருந்தார் அந்த அறையினுள் பாம்பு ஒன்று வந்தது கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு அந்த பாம்பு வெளியில் சென்றது என்று அனைவரும் அவரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்பொழுது தெரிந்துக்கொண்டு இருக்கமுடியும்.

பாம்பு வந்து சென்றபிறகு அவரின் வாழ்க்கையில் பெரிய மாறுதல் உலக புகழ் சாமியாராக இருந்தார். பாம்பு வரவில்லை ராகு உள்ளே வந்தார் உலகபுகழாக மாறிவிட்டார் என்பது தான் உண்மை.

உலகபுகழாக மாறுவதற்க்கு எல்லாம் ராகு தான் காரணம். ராகு என்ற கிரகம் மட்டும் ஒருவனை தூக்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் அவன் புகழின் உச்சிக்கு சென்றுவிடுவான் என்பது மட்டும் உண்மை. அந்தளவுக்கு ஒருவனை தூக்கும் ஆற்றல் பெற்ற கிரகம் ராகு.

நீங்கள் வசிக்கும் தெருவில் நீங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும் என்றாலும் அதற்கும் கிரகத்தின் பலன் இல்லாமல் ஒன்றும் நடக்காது. கிரகங்கள் விளையாடும் விளையாட்டு தான் மனிதவாழ்க்கை மனிதனிடம் ஒன்றுமே இல்லை என்பது மட்டும் உண்மை.

மனிதனால் ஒரு சில விசயங்களை செய்ய முடியும் அதாவது நாம் ஒரு சில வழிபாட்டை மேற்க்கொண்டு வந்தால் ஒரு கிரகத்தின் ஆற்றலை பெற்று சிறந்து விளங்கமுடியும். 

என்னால் உங்களின் ஜாதகத்தை பார்த்து ஒரு சில விசயங்களை மட்டும் செய்து உங்களின் வாழ்க்கையை மாற்றமுடியும் என்பது எனது தொழில் திறமை. எனது தொழிலில் நம்பிக்கை வைத்து சொல்லுகிறேன் உங்களின் வாழ்க்கையில் ராகு வைத்து உங்களை பெரிய ஆளாக மாற்றமுடியும். ராகு என்ற கிரகத்தை வைத்து பல பேரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறேன். நீங்களும் மாறவேண்டும் என்றால் தகுதியோடு என்னை வந்து சந்தியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: