வணக்கம்!
புதன்கிரகம் மாமாவுக்கு காரத்துவம் உடைய ஒரு கிரகம். உங்களின் மாமா வழியில் நல்லது நடக்குமா அல்லது அவரின் வழியில் பிரச்சினை வருமா என்பதை காட்டக்கூடிய ஒரு கிரகமாகும். இராசியில் புதனுக்குக்கு என்று மிதுனம் மற்றும் கன்னி ராசியாகும்.
மிதுனராசியினர்க்கு மட்டும் மாமனார் வீட்டில் ஆகாது என்று சொல்லுவார்கள். மாமனார் வழியில் அதிக பிரச்சினையை இந்த ராசியினர் சந்திக்க நேரிடும் என்று சொல்லுவார்கள்.
ஒன்று சொல்லவேண்டும் என்று நீண்ட நாள்கள் ஆசை அதற்கு இன்று தான் வாய்ப்பு அமைந்தது. இன்றைய காலத்தில் மாமனார் வீட்டில் இருந்து அதிக வருமானத்தை பார்க்கும் எந்த ஒரு மருமகனும் உருப்பட்டது கிடையாது. மாமனார் வீட்டில் பணம் நிறைய வாங்கிய மருமகன் அனைவரும் வீணாகதான் போய் உள்ளனர்.
நான் நிறைய இடத்திற்க்கு சென்று அந்த அனுபவத்தை வைத்து தான் சொல்லுகிறேன். மாமனார் வீட்டில் எதுவும் எதிர்பார்க்காமல் திருமணத்தை முடித்தவர்கள் நன்றாக இருக்கின்றனர். மாமனார் வீட்டில் நிறைய பணத்தை வாங்கியவர்கள் வீணாக போய்விட்டனர்.
எது எப்படியே போகட்டும் உங்களுக்கு புதன் கிரகம் நன்றாக இருந்தால் மாமனார் வீட்டில் இருந்து நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லலாம்.இளைஞர்கள் உங்களின் ஜாதகத்தில் புதன் எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள்.
திருச்சிக்கு செல்லுகிறேன். இன்று திருச்சியில் என்னை சந்திக்கலாம்.
நவராத்திரி ஹோமத்தை பற்றி பதிவில் சொல்லிருந்தேன். கலந்துக்கொள்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment