Followers

Tuesday, September 6, 2016

காயத்தை ஏற்படுத்தும் செவ்வாய்


ணக்கம்!
          ஒரு சிலருக்கு செவ்வாய் லக்கனத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கும். செவ்வாய் லக்கனத்தோடு இருப்பவர்களுக்கு முகத்தில் வெட்டு தளும்பு போல் இருக்கும். அதோடு ஒரு சிலருக்கு செவ்வாய் கிரகம் எழில் இருக்கும் அவர்களுக்கும் வெட்டுதளும்பு உள்ள முகம்போல இருக்கும்.

செவ்வாய் லக்கனத்தோடு சம்பந்தப்பட்டாலே அவர்களுக்கு முகம் அந்தளவுக்கு பொழிவோடு இருக்காது காயத்தோடு தான் இருக்கும். ஒரு சிலருக்கு தலையில் அடிப்பட்டு ஏதாவது தையல் போட்டது போல் இருக்கும்.

தலையில் செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்ட ஏதாவது ஒரு வடு இல்லாமல் இருக்காது. செவ்வாய் கிரகத்தின் தன்மை அப்படிப்பட்டது அது ஒரு போர்கிரகம் அல்லவா அதனால் அப்படிப்பட்ட காயத்தை ஏற்படுத்துகிறது.

இந்த காலத்தில் போர்க்கு எல்லாம் யார் செல்லுகின்றார்கள். போர் என்று வந்தாலும் யார் அரிவாள் கத்தி எல்லாம் எடுக்கிறார்கள். கையில் அதிநவீன கருவிகள் எல்லாம் வந்துவிட்டது. தற்பொழுது செவ்வாய்கிரகம் விபத்து அல்லது பருவால் வருவதுபோல் உள்ள காயங்களை ஏற்படுத்துகிறது.

ஒரு சிலருக்கு ரவுடி ஜாதகமாக இருக்கும். ரவுடி ஜாதகமாக இருக்கும்பொழுது பிறர் வந்து வெட்டியதால் அவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கும். செவ்வாயின் தசாவில் இது நடக்க வாய்ப்புள்ளது.

ஒரு சிலருக்கு சிறுவயதிலேயே காயங்களை ஏற்படுத்திவிடுகிறது. செவ்வாய் விளையாட்டுக்கும் காரத்துவம் உடையவர் தான் இளம்வயதில் விளையாடும்பொழுது காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக லக்கனத்தில் செவ்வாய் சம்பந்தப்பட்டு உங்களின் குழந்தைகளின் ஜாதகத்தில் இருந்தால் இப்படிப்பட்ட சமாச்சாரம் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: