வணக்கம்!
நண்பர் சொல்லிருந்தார் சந்திரனை பலப்படுத்த யோக தியானம் செய்யலாம் என்றார். இதுவும் சரியான ஒரு வழிதான் அதே நேரத்தில் உங்களுக்கு யோக தியானம் கூட வேண்டும் என்றாலும் அதற்கும் சந்திரன் வழி செய்யவேண்டும்.
சந்திரனுக்கு முதலில் பரிகாரத்தை செய்துவிட்டு அதன் பிறகு யோக தியானத்தை மேற்க்கொள்ளலாம். பரிகாரத்தை நாங்கள் செய்ய சொல்லுவதே முதலில் கிரகத்தை சாந்தப்படுத்தவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறோம்.
சந்திர கிரகத்தை யோகாவிலேயே சாந்தப்படுத்த முடியும் என்றால் தாராளமாக செய்யுங்கள். ஏதோ ஒரு வழியில் அதனை நாம் செய்துவிட்டால் போதும். கண்டிப்பாக நல்ல வழி நமக்கு பிறக்கும்.
என்னுடைய எண்ணம் என்ன என்றால் இருக்கின்ற பிரச்சினையில் இருந்து தப்பித்து வந்தால் போதும் என்று தான் நினைப்பேன். நீங்கள் எந்த வழியில் முயற்சி செய்து வந்தாலும் நல்லது.
இந்த மாதம் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனை பிராத்தனை செய்து ஆரம்பிக்கிறேன். அம்மன் நல்ல ஊக்கத்தை கொடுத்து உங்களுக்கு தேவையான நிறைய தகவல்களை தரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Nanri anna
Post a Comment