வணக்கம்!
நண்பர் ஒரு கேள்வி கேட்டார் அதாவது நாம் செய்யும் தர்மம் பூர்வபுண்ணியத்திற்க்கு சேருமா அல்லது பாக்கியஸ்தானத்திற்க்கு சேருமா என்று கேட்டார்.
நாம் தெருவில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் அந்த வழியில் ஒருவர் கையை ஏந்தி பிச்சை கேட்கிறார் என்றால் அவர்க்கு நாம் பிச்சை போடுவது பூர்வபுண்ணியத்திற்க்கு போய் சேரும்.
நாம் கோவிலுக்கு செல்கிறோம் அங்கு அமர்ந்து காவி உடையணிந்து ஒருவர் உங்களிடம் பிச்சை கேட்கிறார் என்றால் அது பாக்கியஸ்தானத்திற்க்கு போய் சேரும்.
தெருவில் உள்ளவர்களுக்கு எல்லாம் நாம் சாப்பாடு போட்டால் அது நமது குழந்தைகளுக்கு செல்லும். நம்முடைய புண்ணியம் நமது குழந்தைகளுக்கு சேரும். கோவிலில் அன்னதானம் செய்தால் அது நமக்கு கிடைக்கும்.
இன்று நமக்கு வேண்டியது பாக்கியஸ்தானம் கொஞ்சம் நல்ல முறையில் நாம் வளர்ந்தவுடன் நமது குழந்தைகளுக்கு புண்ணியம் செய்துவிடவேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்தாலும் நல்லது தான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment