Followers

Thursday, September 1, 2016

குருவின் பார்வை


ணக்கம்!
          குருவின் பார்வை மறைவு ஸ்தானத்திற்க்கு கிடைத்தால் என்ன ஆகும் என்று ஒரு சில ஜாதகங்கள் எழுத தூண்டியது. குருகிரகம் சுபகிரகம். சுபகிரகத்தின் பார்வை சுபவீட்டிற்க்கு கிடைத்தால் தான் நல்லது.

சுபகிரகத்தின் பார்வை சுபவீட்டிற்க்கு கிடைக்காமல் மறைவு ஸ்தானத்திற்க்கு கிடைத்தால் இருக்கின்ற நல்வாய்ப்பும் இல்லாமல் சென்றுவிடும். சுபகிரகத்தின் பார்வை கிடைக்கும்பொழுது அந்த ஸ்தானம் பலம் பெறுவதற்க்கு பதில் பலம் குறைந்துவிடும்.

மறைவு ஸ்தானம் எப்பொழுதும் நல்ல பலத்தோடு இருப்பது நல்லது. மறைவு ஸ்தானத்திற்க்கு குரு பார்வை கிடைக்கும்பொழுது ஒரு சில நன்மை நடக்கும். மறைவுஸ்தானத்தில் உள்ள விசயத்திற்க்கு கடுமை இல்லாமல் எளிமையாக இருக்கும்.

உதாரணத்திற்க்கு விரைய வீடான பனிரெண்டாவது வீட்டிற்க்கு குருவின் பார்வை கிடைக்கும்பொழுது ஆன்மீகம் வழியாக செலவை வைக்கும். எட்டாவது வீட்டிற்க்கு குருவின் பார்வை கிடைக்கும்பொழுது மரணம் இயற்கையாக இருக்கும் அதாவது எளிதாக இருக்கும்.

குருகிரகத்தின் பார்வை சுப வீட்டிற்க்கு கிடைத்தால் அந்த வீடு புண்ணியம் செய்த வீடாக கருதப்படும். அதன் வழியாக பல நன்மை நடைபெறும். வீணாக மறைவுஸ்தானத்திற்க்கு குருவின் பார்வை கிடைத்துவிடகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: