Followers

Sunday, September 11, 2016

பிடிவாதத்தை தரும் சனி சந்திரன் சேர்க்கை


வணக்கம்!
          நேற்று காலையில் திருச்சியில் இருந்து ஒரு நண்பர் நேரிடையாக வந்து அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அந்த காரணத்தால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. நேற்று எழுதவேண்டும் என்று நினைத்த பதிவை இன்று தருகிறேன்.

சனி மற்றும் சந்திரன் சேர்ந்து இருந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பது உங்களுக்கு ஒரளவு தெரியும். மேலும் சில விசயங்களை தருகிறேன். மனிதனுக்கு ஏற்படும் வாதத்திற்க்கு மருந்து உண்டு ஆனால் பிடிவாதத்திற்க்கு மருந்து இல்லை என்று சொல்லுவார்கள் அல்லவா. 

சனி மற்றும் சந்திரன் சேர்க்கை பிடிவாதத்தை அதிகம் தரும். எந்த காரியத்திலும் பிடிவாதத்தோடு இருந்தால் என்ன நடக்கும் நமக்கு வரும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கு செல்லும். இந்தியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு பிடிவாதம் இருந்தால் முடிந்தது கதை என்றே சொல்லலாம். இங்கு மக்கள் அதிகம் ஒரு விசயத்திற்க்கு ஒருத்தரை அணுகினால் நாம் பிடிவாதமாக இருந்தால் அடுத்தவரை பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

எந்த ஒரு விசயமாக இருந்தாலும் சரி இங்கு கிடைக்கவில்லை என்றால் அடுத்த இடத்தில் அது கிடைக்கும் என்று சென்றுவிடுவார்கள். சனி மற்றும் சந்திரன் சேர்க்கை உள்ளவர்கள் இப்படி தான் பிடிவாதமாக இருந்து வாழ்க்கையை சீரழித்துக்கொள்வார்கள்.

திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சினைக்கு அதிகம் காரணம் பிடிவாதமாக தான் இருக்கும். இந்த பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கொண்டு செயல்பட்டால் நல்லது.

சந்திரன் சம்பந்தப்படுகின்ற மகரம் மற்றும் கும்ப ராசியில் உள்ளவர்களில் கும்ப ராசி மட்டும் கொஞ்சம் அதிகமாக பிடிவாதமாக இருப்பார்கள். நீங்களும் இதனை அறிந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது.

நேராக இருக்கும் மரத்தை தான் முதலில் வெட்டுவார்கள். பிடிவாதமாக இருந்தால் நமக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பதை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: