வணக்கம்!
என்ன தான் லட்சக்கணக்கில் தனியார் கம்பெனியில் வேலை செய்தாலும் அரசாங்க வேலை பாேல் வருமா என்று நம்ம ஆட்கள் நினைப்பது உண்டு. அரசாங்கம் வேலை என்றால் அனைவருக்கும் பிடிக்ககூடிய ஒன்று அல்லவா.
அரசாங்க வேலை எல்லாேருக்கும் கிடைக்க கூடிய ஒன்றா என்றால் அது இல்லை என்று தான் ஜாதகத்தை பார்த்து சொல்லவேண்டும். ஜாதகத்தில் அரசாங்க வேலை உள்ள அமைப்பு பெரும்பாலும் இருக்காது.
சூரியன் நன்றாக இருந்தால் பெரும்பாலும் ஜாதகர் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யலாம். சூரியன் சரியில்லை என்றால் அரசாங்க வேலை கிடைக்காது என்று சொல்லலாம். ஒரு சில ஜாதகங்களில் சூரியன் நன்றாக இருந்தும் ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்காமல் இருக்கின்றனர்.
பெரும்பாலும் ஏழரைச்சனி காலத்தில் அரசாங்க வேலை கிடைக்காது. ஏழரைச்சனி காலத்தில் போராடி தான் அரசாங்க வேலையை வாங்க வேண்டியிருக்கும்.
சூரியன் சரியில்லை என்றாலும் அரசாங்க வேலை கிடைக்கவேண்டும் என்றால் ஞாயிறு தோறும் சூரியனை வணங்கி வந்தால் போதும் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment